சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஓய்வு பெற்ற சப்–இன்ஸ்பெக்டர் கைது

மதுரையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஓய்வு பெற்ற சப்–இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
மதுரை,
மதுரை ஆத்திகுளம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் திரவியம் (வயது 68). ஓய்வு பெற்ற போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர். நேற்று விடுமுறை தினம் என்பதால் அந்த பகுதி சிறுமிகள் அங்கு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது 9 வயது சிறுமியிடம், திரவியம் ஆபாச செய்கைகளை காட்டி பாலியல் தொந்தரவு கொடுத்தார்.
இதை அந்த சிறுமி பெற்றோரிடம் கூறினார். மேலும் இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. ஆத்திரம் அடைந்த அக்கம் பக்கத்தினர் திரவியத்தின் வீட்டை நோக்கி வந்தனர். அவர் வீட்டுக்குள் ஓடி கதவை மூடிக்கொண்டார். அப்பகுதி மக்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தல்லாகுளம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சமரசம் பேசி பொதுமக்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
பின்னர் திரவியத்தை கைது செய்து விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு வேனில் அழைத்துச் சென்றனர்.
திரவியம், அந்த பகுதியை சேர்ந்த பல சிறுமிகளுக்கு இதுபோன்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.