பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெறக்கோரி சி.ஐ.டி.யு. ஆட்டோ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெறக்கோரி சி.ஐ.டி.யு. ஆட்டோ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 July 2018 4:15 AM IST (Updated: 22 July 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை சி.ஐ.டி.யு. ஆட்டோ சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுச்சேரி,

புதுவை சி.ஐ.டி.யு. ஆட்டோ சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை காந்திவீதியில் உள்ள அமுதசுரபி அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். விலைகளை தீர்மானிக்கும் அதிகாரத்தை அரசே ஏற்றிட வேண்டும், பெட்ரோல், டீசல் வரிகளை சரக்கு மற்றும் சேவை வரிக்குள் கொண்டு வர வேண்டும். பல மடங்கு உயர்த்திய இன்சூரன்ஸ் கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும்.

மோட்டார் வாகன தொழிலாளர்களின் வாழ்வை சீரழிக்கும் புதிய போக்குவரத்து சட்ட மசோதாவை திரும்பப் பெற வேண்டும். புதுச்சேரி அரசு அமைப்புச்சாரா தொழிலாளர்கள் நலச்சங்கத்தை, நலவாரியமாக மாற்றி நிதிஒதுக்கி நடைமுறைப்படுத்த வேண்டும், ஆட்டோ தொழிலாளர்களுக்கு தனி வாரியம் ஏற்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.


Next Story