உடுமலை, பொதுமக்களின் அடிப்படை தேவையை அதிகாரிகள் நிறைவேற்றவேண்டும்
உடுமலை ஊராட்சி பகுதிகளில் அதிகாரிகள் பொதுமக்களின் அடிப்படை தேவையை கேட்டறிந்து நிறைவேற்ற வேண்டும் என்று உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த திட்டப்பணிகள் ஆய்வுக்கூடத்தில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கூறினார்.
உடுமலை,
உடுமலை ஒன்றியத்தில் மொத்தம் 38 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சி பகுதிகளில் என்னென்ன வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்துள்ளன. இனி என்னென்ன பணிகள் தேவை என்பது குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று பிற்பகல் உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி ஒவ்வொரு ஊராட்சியிலும் என்னென்ன பணிகளை செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகளிடம் கேட்டறிந்தார். அப்போது உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள் தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள், திட்டப்பணிகள் ஆகியவை குறித்து தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது.
இப்போது உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் பொதுமக்கள் உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகளையே அணுகி வருகின்றனர். அதனால் உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள் தங்களது ஊராட்சி பகுதிக்கு தெருவிளக்கு, குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து கோரிக்கைவைக்கின்றனர்.
ஒவ்வொரு ஊராட்சி பகுதியிலும் என்னென்ன அடிப்படை பணிகள் தேவை என்று அதிகாரிகள் கேட்டறிந்து அவற்றை நிறைவேற்ற வேண்டும். தெருவிளக்குகள் அனைத் தையும் எரிய செய்ய வேண்டும். இதை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மாலை 6 மணிக்கு மேல் நேரடியாக வாரம் ஒரு முறை சென்று ஆய்வு செய்ய வேண்டும்.
இதற்கு உங்களுக்கு ஒரு மாதம் அவகாசம் தருகிறேன். அதற்குள் எரியாத தெருவிளக்குகளை பழுது பார்த்து எரிய செய்ய வேண்டும். நான் முன்னறிவிப்பு இன்றி ஊராட்சி பகுதிக்கு செல்லும் போது தெருவிளக்குகள் எரியாமல் இருந்தால் அங்கிருந்து கொண்டு உங்களை அழைத்து கேட்பேன். அதனால் அனைத்து தெருவிளக்குகளும் எரிய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதுபோல் குடிநீர் வசதி, சாலைவசதி உள்பட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும்.
கூட்டத்திற்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கே.ரமேஷ்குமார் ஆகியோர் முன்னிலைவகித்தனர். கூட்டத்தில் ஆர்.டி.ஓ.அசோகன், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர்கள் பாலசுப்பிரமணியம் (ஊராட்சி), முருகேசன் (தணிக்கை), உடுமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் எம்.ரமேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) சண்முகவதி உள்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் ஆமந்தகடவு ஊராட்சியில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்ட பாசன கால்வாயினையும், உடுமலை வட்டத்தில் அமைந்துள்ள திருமூர்த்தி அணையினையும் மற்றும் காண்டூர் கால்வாயையும் அமைச்சர் பார்வையிட்டார். ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் பிரசன்னாராமசாமி, பொறியாளர்கள் குழந்தைசாமி, முத்துசாமி, ராஜூ, உதவிபொறியாளர்கள் காஞ்சித்துரை, செந்தில்குமரன், ஆனந்தன், குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் பாண்டியன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story