தமிழகம் முழுவதும் மின்சார வாரியத்தில் இடமாறுதல் கேட்டு 14 ஆயிரம் பேர் விண்ணப்பம் அமைச்சர் பேட்டி
தமிழகம் முழுவதும் மின்சார வாரியத்தில் பணிபுரிந்து வரும் பணியாளர்களில் இடமாறுதல் கேட்டு 14 ஆயிரம் பேர் ஆன்லைனில் விண்ணப்பம் செய்து இருப்பதாக அமைச்சர் தங்கமணி கூறினார்.
நாமக்கல்,
தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று குமாரபாளையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் ஏற்கனவே மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த திட்டத்தின் அடிப்படையில் சாயப்பட்டறைகளின் உரிமையாளர்கள் 25 சதவீதம் பங்குத்தொகை போடவேண்டும் என்று உள்ளது. இந்த 25 சதவீத தொகையையும், அரசிடம் வட்டியில்லா கடனாக வாங்கி தருவதாக கூறி இருக்கிறேன். இதற்கு பின்னரும் இடம் தேர்வு செய்வதில் தொய்வாக இருக்கின்றார்கள். உடனடியாக இடம் தேர்வு செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறோம்.
அவ்வாறு தேர்வு செய்யும் நிலையில் உடனடியாக சுத்திகரிப்பு நிலையம் அமைத்து சாயம் ஏற்றும் தொழிலை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சுத்திகரிப்பு நிலையம் அமைக்க சாயப்பட்டறைகளின் உரிமையாளர்களால் ஈரோட்டில் 2 இடங்களும், பள்ளிபாளையத்தில் ஒரு இடமும் வாங்கப்பட்டுள்ளது.
குமாரபாளையத்தில் மட்டும்தான் இன்னும் இடம் வாங்காமல் உள்ளார்கள். வாங்கியவுடன் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து இத்தொழிலை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மின்மாற்றி வாங்குவதற்கு டெண்டர் விடப்பட்டு உள்ளது. மின்மாற்றிகளை நிறுவுவது மின்வாரியத்தின் மூலம்தான் மேற்கொள்ளப்படுகிறது. தமிழகம் முழுவதும் மின்சார வாரிய பணியாளர்கள், வேண்டுகோள் விண்ணப்பம் மற்றும் 3 ஆண்டுகளுக்கு மேல் எங்கெல்லாம் இருக்கின்றார்களோ, அவர்கள் எல்லாரையும் மாறுதல் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில், கொள்கை முடிவின்படி இப்போது மனுக்கள் ஆன்லைனில் பெறப்பட்டு இருக்கிறது.
அந்த வகையில் 14 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டிருக்கிறது. அந்த மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. யார், யார் எங்கே கேட்டிருக்கிறார்களோ அந்த இடங்கள் காலியாக இருப்பின் அந்த இடங்கள் வழங்கப்படும். நேர்மையான முறையில், ஒளிவு மறைவற்ற முறையில் இந்த பணி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.

Related Tags :
Next Story