கிங் சர்க்கிள் பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சட்டமன்றத்தில் தமிழ்ச்செல்வன் பேச்சு

கிங் சர்க்கிள் பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சட்டமன்றத்தில் தமிழ்ச்செல்வன் பேச்சு
x
தினத்தந்தி 21 July 2018 11:30 PM GMT (Updated: 21 July 2018 10:33 PM GMT)

கிங் சர்க்கிள் பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்றத்தில் கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. பேசினார்.

மும்பை, 

கிங் சர்க்கிள் பகுதியில் மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்றத்தில் கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. பேசினார்.

மழைநீர் தேங்குவதை...

நாக்பூரில் நடந்த சட்டமன்ற கூட்டத்தில் சயான் கோலிவாடா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மும்பையில் பெய்யும் சிறு மழைக்கு கூட கிங் சர்க்கிள், இந்துமாதா போன்ற பகுதிகளில் வெள்ளம் தேங்கி விடுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர். எனவே அந்த பகுதிகளில் வெள்ளநீர் தேங்குவதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். முதல்-மந்திரி இந்த பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காணவேண்டும்.

அகதிகள் குடியிருப்பு

சயான் கோலிவாடாவில் 80 சதவீதம் குடிசைப்பகுதி தான் உள்ளது. அந்த குடிசை பகுதிகளை சீரமைக்க கட்டுமான அதிபர்கள் தீவிரம் காட்டுவதில்லை. அவர்கள் வீடு கட்டி தருகிறோம் என உறுதி மொழி மட்டுமே அளிக்கிறார்கள். ஆனால் வீடு கட்டி தராமல் நீண்ட நாட்களாக ஏமாற்றி வருகின்றனர்.

இதேபோல சயான் கோலிவாடா ஜி.டி.பி.நகர், பஞ்சாபி காலனி பகுதிகளில் உள்ள அகதிகள் குடியிருப்புகள் வெகுநாட்களாக சீரமைக்கப்படாமல் உள்ளது. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் அகதிகள் குடியிருப்புகளை சீரமைக்க முதல்-மந்திரி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story