கொண்டஞ்சேரி, ஆலப்பாக்கத்தில் அம்மா திட்ட முகாம்
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் கொண்டஞ்சேரி கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பரணிதரன் தலைமை தாங்கினார்.
திருவள்ளூர்,
முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் ரமேஷ், கொண்டஞ்சேரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி ரமேஷ், வருவாய் ஆய்வாளர் செல்வபாரதி, கிராம நிர்வாக அலுவலர்கள் பூரணசெல்வி, விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கொண்டஞ்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு முதியோர் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோருக்கு உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்களை அளித்தனர். இந்த முகாமில் ஊராட்சி செயலாளர் அசோப்ராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் லோகநாதன், பரணி, ரமேஷ், கல்பனா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே உள்ள ஆலப்பாக்கம் ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. இதற்கு ஊத்துக்கோட்டை தனி தாசில்தார் லதா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து 22 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இந்த முகாமில், துணை தாசில்தார் வசந்தி, வருவாய் ஆய்வாளர் மகேந்திரன், கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் முதியோர் உதவித்தொகை, ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், பட்டா கோருதல் உள்ளிட்ட 22 கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடம் இருந்து ஊத்துக்கோட்டை தனி தாசில்தார் லதா பெற்றுக்கொண்டார்.
இதில், 8 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. 14 மனுக்கள் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உடனடி தீர்வு காணப்பட்ட 8 மனுக்களுக்கு அதற்கான ஆணையை ஊத்துக்கோட்டை தனி தாசில்தார் லதா பயனாளிகளுக்கு வழங்கி பேசினார். முன்னதாக அனைவரையும் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் ஆறுமுகம் வரவேற்றார். முடிவில் சுந்தர்ராஜ் நன்றி கூறினார்.
காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வடகால் கிராமத்தில் அம்மா திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் கவிதா தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார். துணை தாசில்தார் பூபாலன், வல்லம் வருவாய் ஆய்வாளர் சீனுவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முதியோர் உதவித்தொகை கேட்டு மனுவும், பட்டா மாற்றம் கோரி மனுவும் ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், மாற்றுத்திறனாளி சான்று, வாரிசு சான்று அடங்கிய மனுக்களை பொதுமக்களிடம் இருந்து தனி தாசில்தார் கவிதா பெற்றுக்கொண்டார். சில மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மீதி மனுக்கள் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் கிராம நிர்வாக அதிகாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story