குறிக்கோளை அடைவதற்கு தேவையான சக்தி ஆன்மிகம் மூலம் கிடைக்கும்
குறிக்கோளை அடைவதற்கு தேவையான சக்தி ஆன்மிகம் மூலம் கிடைக்கும் என்று ஸ்ரீபுரத்தில் நடந்த கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய மந்திரி சத்ய பால்சிங் கூறினார்.
வேலூர்,
வேலூரை அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் சக்தி அம்மாவின் 42-வது ஜெயந்தி விழாவையொட்டி ‘வித்யா நேத்ரம்’ திட்டத்தின் கீழ் 600 கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு சக்தி அம்மா தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன், வெளிநாட்டு பக்தர்கள் லின், சிந்தி சுவிட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சக்தி அம்மாவின் பக்தர் அனுசா வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக மத்திய மனிதவள மேம்பாடு, நீர்வளத்துறை இணை மந்திரி சத்ய பால்சிங் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் 600 கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான கல்வி உதவித்தொகையை சக்தி அம்மா, மத்திய மந்திரி சத்ய பால்சிங் ஆகியோர் வழங்கினார்கள். தொடர்ந்து சக்தி அம்மா பேசியதாவது:-
சிறுவயதில் மாணவர்களிடம் படித்து முடித்து எதிர்காலத்தில் என்ன செய்ய போகிறாய்? என்று கேட்டால், நன்றாக படித்து, நல்ல வேலைக்கு சென்று இந்த சமுதாயத்துக்கு நல்லது செய்வேன் என்று கூறுவார்கள். அதே கேள்வியை பிளஸ்-2 படிக்கும் மற்றும் கல்லூரி படிக்கும் மாணவர்களிடம் கேட்டால், நன்றாக படித்து, நல்ல வேலைக்கு செல்வேன் என்று கூறுவார்கள். சமுதாயத்துக்கு நல்லது செய்வேன் என்று அவர்கள் கூற மாட்டார்கள். இதற்கு காரணம் சிறுவயதில் மாணவர்களுக்கு எவ்வித கடமைகளும் கிடையாது. ஆனால் வளர்ந்த பின்னர் மாணவர்கள் தங்களுக்கு நிறைய கடமைகள் உள்ளது என்று நினைக்கிறார்கள். ஒவ்வொருவரும் சமுதாயத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதை கடமையாக நினைக்க வேண்டும். அப்போது பலபேருக்கு நல்லது செய்யலாம். ஒவ்வொரு மனிதனும் தனது கடமை என்று நினைப்பதை எப்படியாவது செய்து முடிக்கின்றனர். கடமையை செய்து முடிக்க தேவையான சக்தி, ஆற்றல் ஒவ்வொருவருக்கும் கிடைக்கிறது.
மாணவர்கள் சமுதாயத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதை கடமையாக எடுத்து கொள்ள வேண்டும். தனது தேவைகளை பூர்த்தி செய்து விட்டு சமுதாயத்துக்கு நல்லது செய்யலாம் என்று எண்ணக்கூடாது. ஏனெனில் மனிதர்களுக்கு போதும் என்கிற எண்ணம் வராது. சமுதாயத்துக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதை அத்தியாவசிய கடமையாக எடுத்து கொண்டு நிறைவேற்ற வேண்டும்.
கல்வி உதவித்தொகை பெறும் மாணவ-மாணவிகள் கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி படிக்க வேண்டும். வாழ்வில் நல்ல நிலைக்கு வந்த பின்னர் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். மற்றவர்களுக்கு நல்லது செய்வதில் தான் சந்தோஷம் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
மத்திய மந்திரி சத்ய பால்சிங் பேசியதாவது:- கல்வி உதவித்தொகை பெறும் மாணவர்கள் அனைவரும் சிறந்த முறையில் படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் தாய் மொழியை முதலில் முழுவதுமாக கற்க வேண்டும். அதன் பின்னர் மற்ற மொழிகளை கற்று கொள்ளலாம். அதில் தவறு கிடையாது. தாய் மொழியில் பேசும்போது தான் ஒரு பவர்(சக்தி) கிடைக்கிறது. மாணவர்களுக்கு உயர்ந்த நோக்கங்கள் இருக்க வேண்டும். அதனை நோக்கி தொடர்ந்து பயணிக்க வேண்டும்.
பிரதமர் மோடி கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அதற்காக அதிகளவில் திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். இந்தியாவில் ஒரு குழந்தைகூட கல்வி கற்காமல் இருக்க கூடாது என்ற நோக்கத்துடன் அவர் செயல்பட்டு வருகிறார். மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற தன்னம்பிக்கை, கடமை, தகவல் பரிமாற்றங்களை அறிந்து கொள்ளுதல், ஊக்கத்துடன் செயல்படுதல் போன்றவற்றை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். மாணவர்களுக்கு வாழ்க்கையில் குறிக்கோள் இருக்க வேண்டும். அதனை வெற்றிகரமாக முடிக்க சக்தி தேவை. அந்த சக்தி ஆன்மிகம் மூலம் கிடைக்கும். ஆன்மிகம் மூலம் சக்தி கிடைக்கும் என்பது விஞ்ஞான பூர்வ உண்மையாகும். இது பல சமயங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், ஸ்ரீபுரம் இயக்குனர் சுரேஷ்பாபு, நாராயணி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பாலாஜி, ஸ்ரீபுரம் மேலாளர் சம்பத் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அறங்காவலர் சவுந்தர் ராஜன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story