செய்யாறு ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.86½ லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள்


செய்யாறு ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.86½ லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள்
x
தினத்தந்தி 23 July 2018 4:45 AM IST (Updated: 23 July 2018 12:23 AM IST)
t-max-icont-min-icon

செய்யாறு ஊராட்சி ஒன்றியத்தில் மேல்நாகரம்பேடு, முக்கூர், பாராசூர், புளியரம்பாக்கம், வடுகப்பட்டு ஆகிய கிராமங்களில் ரூ.86 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம், கிராம சேவை மையம் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறப்பு விழா நடந்தது.

செய்யாறு,

விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தூசி கே.மோகன், உதவி கலெக்டர் பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு, புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். இதில் அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

முன்னதாக முக்கூர் கிராமத்தில் ரூ.60 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட பணிகளை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Next Story