சத்தியமங்கலத்தில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்


சத்தியமங்கலத்தில் பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 July 2018 3:30 AM IST (Updated: 23 July 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே சத்தி நகர பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு பவானிசாகர் தொகுதி பொறுப்பாளர் வக்கீல் அஜீத்குமார் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் பவானி ஆற்றில் சாக்கடை கழிவுநீர் கலப்பதை தடுக்கக்கோரி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பா.ஜ.க. நிர்வாகி கனகசபாபதி, மாவட்ட செயலாளர் செந்தில்குமார் மற்றும் நகர, ஒன்றிய நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story