இழந்த டி.என்.டி. உரிமைகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும், அமைச்சர் உதயகுமார் பேச்சு
இழந்த டி.என்.டி. உரிமைகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உசிலம்பட்டியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
உசிலம்பட்டி,
அ.தி.மு.க. அரசின் ஓராண்டு சாதனை விளக்க சைக்கிள் பேரணி மதுரை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக நடைபெற்றது. இந்த பேரணி மாநில பேரவைச் செயலாளரும், அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடந்தது. உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிற்கு உள்பட்ட சேடபட்டிக்கு இந்த பேரணி வந்தது. அப்போது உசிலம்பட்டி எம்.எல்.ஏ.நீதிபதி வரவேற்பு கொடுத்தார். பின்னர் சின்னக்கட்டளையில் முன்னாள் யூனியன் சேர்மன் முனியம்மாள் பிச்சைமணி தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
அதேபோல அல்லிகுண்ட விலக்கில் முன்னாள் யூனியன் சேர்மன் பால்பாண்டியும், கணவாய்கேட்டில் உள்ள எழுமலை பிரிவில் எழுமலை நகர் செயலாளர் வாசிமலை தலைமையிலும் வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதன் பின்னர் கணவாய் மலை அருகில் அமைச்சர் மரக்கன்றுகளை நட்டார். இதில் உசிலம்பட்டி ஆர்.டி.ஓ. முருகேசன், தாசில்தார் நவநீதகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து நல்லுத்தேவன்பட்டியில் போத்தம்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் பாண்டியம்மாள், உக்கிரபாண்டி வரவேற்றனர்.
பின்னர் உசிலம்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் குணலான் முன்னிலை வகித்தார். மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் ராஜன்செல்ப்பா எம்.எல்.ஏ., மேலூர் எம்.எல்.ஏ. பெரியபுள்ளான், முன்னாள் எம்.எல்.ஏக்கள் தவசி, தமிழரன், பாண்டியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகை என 485 பயணாளிகளுக்கு அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் வழங்கினார். அதன் பின்னர் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லு£ரி முன்பாக மாணவர்கள் அமைச்சருக்கு வரவேற்பு கொடுத்தனர்.
அப்போது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் கூறியதாவது:– இழந்த டி.என்.டி உரிமைகளை பெற தொடர்ந்து போராடி வருகின்றனர். இதுகுறித்து உசிலம்பட்டி எம்.எல்.ஏ மற்றும் மேலு£ர் எம்.எல்.ஏ ஆகியோர் சட்டசபையில் பேசியுள்ளனர். இழந்த அவர்களின் உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றுத்தர அ.தி.மு.க. அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். மேலும் உசிலம்பட்டி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான 58 கிராம கால்வாய்த் திட்டப் பணிகள் முடிவடைந்து விட்டது. விரையில் இந்த கால்வாயில் தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என்று கூறினார்.
தொடர்ந்து சைக்கிள் பேரணி வாலாந்தூர் வந்த போது, அங்கு மாவட்ட விவசாய அணி செயலாளர் வேலுச்சாமி தலைமையிலும், செல்லம்பட்டியில் மாவட்ட கவுன்சிலர் பண்பாளன், முன்னாள் யூனியன் சேர்மன் பவளக்கொடிராசுக்காளை மற்றும் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் சைக்கிள் பேரணி கருமாத்தூர் வழியாக செக்கானு£ரணி வந்து சேர்ந்தது.