தாறுமாறாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய டி.வி. நடிகர் கைது ஒருவர் காயம்; 3 கார்கள் சேதம்
மும்பை ஒஷிவாராவில், தாறுமாறாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய டி.வி. நடிகர் கைது செய்யப்பட்டார். இதில் ஒருவர் காயம் அடைந்தார். 3 கார்கள் சேதம் அடைந்தன.
மும்பை,
மும்பை ஒஷிவாராவில், தாறுமாறாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய டி.வி. நடிகர் கைது செய்யப்பட்டார். இதில் ஒருவர் காயம் அடைந்தார். 3 கார்கள் சேதம் அடைந்தன.
தறிகெட்டு ஓடிய கார்
மும்பை ஒஷிவாரா நியூ லிங் சாலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அந்த கார் அங்குள்ள கர்நாடக வங்கி அருகில் வந்தபோது, திடீரென தறிகெட்டு ஓடி முன்னால் சென்று கொண்டிருந்த 3 கார்கள் மீது அடுத்தடுத்து மோதியது.
மேலும் அந்த கார் சாலையின் மத்தியில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி நின்றது. இந்த விபத்தில் 3 கார்களும் சேதம் அடைந்தன. இதில் ஒருவர் காயம் அடைந்தார். பொதுமக்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
டி.வி. நடிகர் கைது
தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்தனர். விபத்தை ஏற்படுத்தியவரை கைது செய்தனர். விசாரணையில், அவரது பெயர் சித்தார்த் சுக்லா (வயது 37) என்பதும், அவர் டி.வி. நடிகர் என்பதும் தெரியவந்தது. இந்த விபத்தில் டி.வி. நடிகரும் லேசான காயம் அடைந்திருந்தார். அவர் கோரேகாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
விபத்தை ஏற்படுத்திய டி.வி. நடிகர் சித்தார்த் சுக்லா மது குடித்து இருந்தாரா? என்று போலீசார் சோதனை செய்தனர். ஆனால் அவர் மது குடித்திருக்கவில்லை என்று கூறப்படுகிறது. காரை தாறுமாறாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது தொடர்பாக அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story