டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட்டம்
அஞ்சுகிராமம் அருகே டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்கள், போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர்.
அஞ்சுகிராமம்,
அஞ்சுகிராமம் அருகே மருங்கூரில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று முன்தினம் வியாபாரம் முடிந்த பின்பு இரவு 10 மணிக்கு ஊழியர்கள் வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு சென்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர்.
பூட்டை உடைக்கும் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்கள் திடீரென கண்விழித்தனர். அவர்கள் ஜன்னல் வழியாக வெளியே பார்த்த போது, மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிசந்திரன் மற்றும் போலீசார் வாகனத்தில் டாஸ் மாக் கடையை நோக்கி விரை ந்து சென்றனர். அவர்கள் கடையை நெருங்கிய போது, போலீசார் வருவதை அறிந்த மர்மநபர்கள் வேகமாக தப்பி ஓடினர். உடனே போலீசார் கடைக்கு சென்று பார்த்த போது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
அதைத்தொடர்ந்து, டாஸ் மாக் கடையின் மேலாளர் ராஜாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் கடை க்கு சென்று பார்வையிட்ட போது, பணம், மது பாட்டில்கள் எதுவும் கொள்ளை போகவில்லை என்பது தெரியவந்தது.
இந்த கொள்ளை முயற்சி குறித்து மேலாளர் ராஜா அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story