வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை குறித்து பரிசீலனை அரசு ஊழியர்களுக்கு தீபாவளி முதல் சம்பள உயர்வு மந்திரி சுதிர் முங்கண்டிவார் அறிவிப்பு
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி முதல் சம்பளம் உயர்த்தப்படும் என்றும், வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை குறித்து பரிசீலனை செய்யப்படுவதாகவும் மந்திரி சுதிர் முங்கண்டிவார் தெரிவித்தார்.
மும்பை,
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி முதல் சம்பளம் உயர்த்தப்படும் என்றும், வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை குறித்து பரிசீலனை செய்யப்படுவதாகவும் மந்திரி சுதிர் முங்கண்டிவார் தெரிவித்தார்.
மராட்டிய நிதி மந்திரி சுதிர் முங்கண்டிவார் நேற்று மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தீபாவளி பரிசு
அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்து அமைக்கப்பட்ட 7-வது ஊதிய பரிந்துரை குழுவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொண்டு உள்ளது. அதன்படி சம்பள உயர்வு வழங்கப்படும். தீபாவளி முதல் (நவம்பர் முதல்) இந்த சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. இது அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக அமையும்.
இந்த சம்பள உயர்வு காரணமாக 19 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவார்கள். அரசுக்கு ரூ.21 ஆயிரத்து 530 கோடி கூடுதல் செலவாகும்.
2 நாட்கள் விடுமுறை
பெண் ஊழியர்களுக்கு குழந்தை பராமரிப்பு விடுமுறையாக 2 ஆண்டு காலமும், குழந்தை பிறப்பை தொடர்ந்து ஆண் ஊழியர்களுக்கு 15 நாட்களும் விடுமுறை வழங்கும் திட்டம் குறித்து பரிசீலனை செய்யப்படுகிறது.
இதேபோல அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை திட்டம் குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின்படி சனிக்கிழமையும் விடுமுறை அளிக்கப்படும். அந்த நாளை ஈடு செய்யும் வகையில் வேலை நாட்களில் தினமும் 15 நிமிடம் கூடுதல் நேரம் பணி செய்ய வேண்டியதிருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story