அம்பர்நாத்தில் பயங்கரம் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் எரித்து கொலை கணவர், மாமியார் கைது
அம்பர்நாத்தில் வரதட்சணை கொடுமை யால்இளம்பெண் மண்எண்ணெய் ஊற்றி எரித்துகொலை செய்யப்பட்டார்.
அம்பர்நாத்,
அம்பர்நாத்தில் வரதட்சணை கொடுமை யால்இளம்பெண் மண்எண்ணெய் ஊற்றி எரித்துகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாகஅவரது கணவரையும், மாமியாரையும் போலீசார் கைது செய்தனர்.
வரதட்சணை கொடுமை
தானே மாவட்டம் அம்பர்நாத்தை சேர்ந்தவர் சங்கம் வாய்லே (வயது30). இவரது மனைவி வைஷாலி (24). இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த சில நாட்களில் இருந்தே சங்கம் வாய்லே மற்றும் அவரது குடும்பத்தினர் வைஷாலியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் வைஷாலியை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தி வந்து இருக்கிறார்கள்.
சம்பவத்தன்று சங்கம் வாய்லேவும், அவரது தாய் லீலாபாயும் (60) சேர்ந்து வைஷாலியின் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொளுத்தினர்.
பரிதாப சாவு
இதில் உடல் கருகி வைஷாலி துடிதுடித்து இறந்து போனார். தகவல் அறிந்து வந்த ஹில்லைன் போலீசார் வைஷாலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வைஷாலியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், சங்கம் வாய்லே மற்றும் அவரது தாய் லீலாபாயை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story