செங்கோட்டை அருகே சின்ன குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்


செங்கோட்டை அருகே சின்ன குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
x
தினத்தந்தி 23 July 2018 4:30 AM IST (Updated: 23 July 2018 4:13 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டை அருகே உள்ள சின்ன குற்றாலம் அருவியில் நேற்று சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

நெல்லை, 

செங்கோட்டை அருகே உள்ள சின்ன குற்றாலம் அருவியில் நேற்று சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.

சின்ன குற்றாலம்

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரை தெற்கு மேடு பகுதியில் சின்ன குற்றாலம் அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கும் செல்லும் பாதை புதர் மண்டி கிடந்தது. சமீபத்தில் கலெக்டர் ஷில்பா உத்தரவுப்படி அருவிக்கு செல்லும் பாதை சீரமைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று விடுமுறை நாள் என்பதால் சின்ன குற்றாலம் அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். அவர்கள் அருவியில் உற்சாகமாக குளித்தனர்.

குழந்தைகள் மகிழ்ச்சி

அருவியில் இருந்து கீழே கொட்டும் தண்ணீர் அங்குள்ள தடாகத்தில் பெருகி, பின்னர் ஆறாக ஓடுகிறது. நேற்று இந்த தடாகத்தில் சிறுவர், சிறுமிகள் குளித்து மகிழ்ந்தனர். பராமரிப்பு இன்றி கிடந்த சின்ன குற்றாலம் அருவிக்கு தற்போது சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து உள்ளது. எனவே பொது மக்கள் நடந்து செல்லும் பாதையை முழுமையாக சீரமைத்து காங்கிரீட் ரோடு போட வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story