கிரேனில் இருந்து கயிறு அறுந்து விழுந்து தொழிலாளி சாவு
நெல்வாய்பாளையம் கிராமத்தில் கிணற்றை ஆழப்படுத்தும் வேலைக்கு சென்றுள்ளார். அவருடன் வேறு 2 பேரும் சென்றுள்ளனர். கிரேனில் இருந்து கயிறு அறுந்து விழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
கல்பாக்கம்,
கல்பாக்கத்தை அடுத்த அணைக்கட்டு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட ஜமீன் எண்டத்தூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் என்ற முருகேசன் (வயது 43). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் நெல்வாய்பாளையம் கிராமத்தில் கிணற்றை ஆழப்படுத்தும் வேலைக்கு சென்றுள்ளார். அவருடன் வேறு 2 பேரும் சென்றுள்ளனர்.
கிணற்றில் 3 பேரும் இறங்கி ஆழப்படுத்தினர். அதில் உள்ள கல் மற்றும் மண் போன்றவற்றை கயிறு கட்டி கிரேன் மூலமாக வெளியேற்றினர். அப்போது எதிர்பாராதவிதமாக கிரேனில் உள்ள கயிறு அறுந்து, கிணற்றின் உள்ளே நின்ற முருகேசன் மீது கல் மண் கூடை விழுந்தது. மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதில் பலத்த காயம் அடைந்த முருகேசனை அருகில் உள்ளவர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து செய்யூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story