வேலூர், செம்மரங்களை பாதுகாக்க குடில்கள் அமைத்து கண்காணிப்பு
வேலூர் வனச்சரக பகுதிகளில் உள்ள செம்மரங்களை பாதுகாக்க குடில்கள் அமைத்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலூர்,
வேலூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான செம்மரங்கள், தேக்குமரங்கள் உள்பட பல்வேறு வகையான மரங்கள் வளர்ந்து காணப்படுகின்றன. சமீபகாலமாக ஆந்திராவில் செம்மரம் வெட்டுபவர்களை அம்மாநில போலீசார் அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.
எனவே செம்மரம் வெட்டும் கும்பல் வேலூர் வனச்சர பகுதிகளில் உள்ள செம்மரங்களை வெட்டி கடத்தலாம் என்று வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து வேலூர் வனச்சரக பகுதிகளில் உள்ள செம்மரங்களை பாதுகாக்கவும், செம்மரங்களை வெட்டுபவர்களை கைது செய்வதற்கும் தேவையான நடவடிக்கையை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்ட வன அலுவலர் (பொறுப்பு) முருகன் உத்தரவின் பேரில், வனச்சரகர் ஜெயராஜ் தலைமையில் சுமார் 10 பேர் அடங்கிய வனபாதுகாப்பு குழுவினர் இரவு நேரங்களில் வனப்பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வனப்பகுதிகளில் இரவு வேளையில் துப்பாக்கி ஏந்திய வனக்காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்காக முக்கிய வனப்பகுதிகளில் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் குடில்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த குடில்களில் இரவு முழுவதும் 2 வனக்காவலர்கள் துப்பாக்கி ஏந்தியபடி கண்காணித்து வருகின்றனர். பகல் வேளையில் வாகனத்தில் வன பாதுகாப்பு குழுவினர் அந்த பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், வேலூர் வனச்சரகத்தில் உள்ள செம்மரங்களை பாதுகாக்க வனத்துறை சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக வனபாதுகாப்பு குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுவில் உள்ள வனக்காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வேலூர் வனச்சரகத்தில் உள்ள மலைபகுதியில் காணப்படும் செம்மரங்களை மர்ம கும்பல் வெட்டி கடத்தி செல்வதை தடுக்கும் நோக்கில் குடில்கள் அமைக்கப்பட்டு வருகிறது. வேலூர் செங்காநத்தம் மலையில் செம்மரங்கள் காணப்படும் பகுதியில் 2 குடில்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. மேலும் சில பகுதிகளில் குடில்கள் அமைக்கப்பட்டு, அங்கு துப்பாக்கி ஏந்திய வனக்காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றனர்.

Related Tags :
Next Story