மணிமுத்தாறு அருகே விளை நிலங்களுக்குள் புகுந்து காட்டு பன்றிகள் அட்டகாசம்


மணிமுத்தாறு அருகே விளை நிலங்களுக்குள் புகுந்து காட்டு பன்றிகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 23 July 2018 5:15 AM IST (Updated: 23 July 2018 5:14 AM IST)
t-max-icont-min-icon

மணிமுத்தாறு அருகே விளை நிலங்களுக்குள் புகுந்து காட்டு பன்றிகள் அட்டகாசம் செய்தன.

அம்பை, 

மணிமுத்தாறு அருகே விளை நிலங்களுக்குள் புகுந்து காட்டு பன்றிகள் அட்டகாசம் செய்தன.

காட்டு பன்றிகள் அட்டகாசம்

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருகே உள்ள சிங்கம்பட்டி பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள மலையடிவாரப்பகுதிகளில் கடந்த 3 நாட்களாக காட்டு பன்றிகள் அட்டகாசம் செய்து வருகின்றன. இரவு நேரங்களில் காட்டு பன்றிகள் கூட்டம் கூட்டமாக விளை நிலங்களுக்குள் புகுந்து அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ள மிளகாய், வெங்காயம், கடலை போன்ற விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

இரவு நேரத்தில் காவலுக்கு இருக்கும் விவசாயிகள் இரவு முழுவதும் ஒலி எழுப்பியும், வெடிகள் வெடித்தும் காவல் காத்து வருகின்றனர். ஆனாலும் ஆங்காங்கே இருந்து கூட்டம் கூட்டமாக வரும் பன்றிகளை விரட்ட முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.

நிவாரணம் வழங்க கோரிக்கை

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், வங்கியில் விவசாய கடன் வாங்கி பயிர் செய்தோம். அறுவடைக்கு தயாரான நிலையில் காட்டு பன்றிகள் கூட்டம் கூட்டமாக விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகுந்த வேதனையில் உள்ளோம். எனவே எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். காட்டு பன்றிகள் விளை நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வதை வனத்துறையினர் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story