செயல்படாமல் இருக்கும் உடற்பயிற்சி கூடம் மீண்டும் திறக்கப்படுமா? இளைஞர்கள் எதிர்பார்ப்பு
பெரவள்ளூரில் செயல்படாமல் இருக்கும் உடற்பயிற்சி கூடத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என அப்பகுதி இளைஞர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.
திரு.வி.க. நகர்,
சென்னை பெரம்பூரை அடுத்த பெரவள்ளூரில் மாநகராட்சி உதவி பொறியாளர் அலுவலகம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான உடற்பயிற்சி கூடம் உள்ளது. இந்த உடற்பயிற்சி கூடம் கடந்த 2009–ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் திறக்கப்பட்டது. இங்கு அப்பகுதி இளைஞர்கள் உடற்பயிற்சி மேற்கொண்டு வந்தனர்.
தொடர்ந்து 2 ஆண்டுகள் மட்டுமே செயல்பட்ட இந்த உடற்பயிற்சி கூடத்தை மாநகராட்சி நிர்வாகம் சரியாக பராமரிக்கவில்லை. இதைத்தொடர்ந்து இங்கு பயிற்சி செய்து வந்த இளைஞர்கள் சொந்த பணத்தில் தேவையான உபகரணங்களை வாங்கியதுடன், உடற்பயிற்சி கூட கட்டிடத்தையும் பராமரித்து பயன்படுத்தி வந்தனர்.
கடந்த 2011–ம் ஆண்டு உடற்பயிற்சி கூடத்தை சீரமைத்து தருவதாக கூறி அப்பகுதி இளைஞர்களிடம் இருந்து மாநகராட்சி உதவி பொறியாளர் சாவியை வாங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் உடற்பயிற்சி கூடத்தில் இருந்த உபகரணங்கள் அருகில் உள்ள ஒரு அறையில் வைத்து பூட்டப்பட்டன.
இதையடுத்து உடற்பயிற்சி கூடம் மாநகராட்சிக்கு சொந்தமான பொருட்களை வைக்கும் குடோனாக பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால், சீரமைப்பு பணிகள் முடிந்து மீண்டும் உடற்பயிற்சி கூடம் திறக்கப்படும் என காத்திருந்த இளைஞர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதுகுறித்து அப்பகுதி இளைஞர்களும், இங்கு உடற்பயிற்சி செய்தவர்களும் கூறியதாவது:–
தற்போது பெரவள்ளூர் பகுதிகளில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடங்களில் சேர வேண்டுமென்றால் குறைந்தபட்சம் மாதம் ஒன்றுக்கு ரூ.500 முதல் ரூ.2 ஆயிரம் வரை கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. மாநகராட்சி சார்பில் இந்த உடற்பயிற்சி கூடத்தை சீரமைத்து கொடுத்தால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம்.
இந்த உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி பெற்று சென்னை அளவிலான போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெற்ற இளைஞர்கள் இருந்தனர். ஆனால் தற்போது மதுபான பாராக காட்சி அளிக்கிறது. மேலும் இந்த உடற்பயிற்சி கூடத்தையொட்டி குழந்தை வளர்ச்சி திட்ட மையமும், கோவிலும் உள்ளன. இரவு நேரங்களில் இங்கு மது குடிப்பவர்கள் அருகில் உள்ள குழந்தை வளர்ச்சி திட்ட மையம் மற்றும் கோவில் அருகே பாட்டில்கள் வீசி அசுத்தம் செய்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறுகின்றனர்.
எனவே சீரமைக்காமல் உள்ள இந்த உடற்பயிற்சி கூடத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என்று அப்பகுதி இளைஞர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.

Related Tags :
Next Story