மெஞ்ஞானபுரம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு - சடையனேரி கால்வாயில் தண்ணீர் திறக்க கோரிக்கை
மெஞ்ஞானபுரம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சடையனேரி கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி மனு கொடுக்கப்பட்டது.
தூத்துக்குடி,
பருவமழை பொய்த்ததால், மெஞ்ஞானபுரம் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே, சடையனேரி கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் வலியுறுத்தி உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார். அவர் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார்.
அப்போது ஸ்ரீவைகுண்டம் தாலுகா வடக்கு தோழப்பன்பண்ணையை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், ‘எங்கள் பகுதியில் சுமார் 400 குடும்பங்கள் உள்ளன. நாங்கள் கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை செய்து வந்தோம். அதன் பின்னர் எங்கள் ஊருக்கு வேலை வாய்ப்பு வரவில்லை என்று அதிகாரிகள் கூறி எங்களை தட்டிக்கழிக்கிறார்கள். எனவே எங்கள் ஊர் மக்களுக்கு தொடர்ந்து வேலை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண் டும்’ என்று கூறி இருந்தனர்.
திருச்செந்தூர் தாலுகா மெஞ்ஞானபுரம் பகுதி மக்கள் கொடுத்த மனுவில், ‘எங்கள் வட்டாரத்தில் 2 ஆண்டுகளாக மழை பெய்யாததால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது. அரசு அமைத்துள்ள ஆழ்துளை கிணறுகளும் வற்றி பொதுமக்களுக்கு போதுமான குடிநீர், மற்றும் அன்றாட தேவைகளுக்கான நீரும் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. கடந்த 1991-96 கால கட்டத்தில் மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் வகையில் சடையநேரி கால்வாயில் இருந்து 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அதே போல் தற்போது சடையநேரி கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும்’ என்று கூறி இருந்தனர்.
கோரம்பள்ளத்தை சேர்ந்த ஜான்சன் என்பவர் கொடுத்த மனுவில், தூத்துக்குடி கோரம்பள்ளம் குளம் தமிழக அரசு சார்பில் தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் தாசில்தார் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் கரம்பல் மண் அள்ள அனுதியளிக்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகளுக்கும் குளத்திற்கும் எந்தவித பயனும் இல்லாமல் ஒழுங்கற்ற முறையில் மண் திட்டுகளாக உள்ளது. மடைகளுக்கு தண்ணீர் கிடைக்க தடையாக இருக்கிறது. தூர்வாரும் பணிக்கும் பயன்இல்லை. எனவே வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை மூலம் அனுமதிச்சீட்டு வழங்குவதை நிறுத்தி தூர்வாரும் பணியை முறையாக நடத்திட வேண்டும் என்று கூறி இருந்தார்.

Related Tags :
Next Story