திருவள்ளூர் அருகே முன்விரோதத்தில் வாலிபர்களுக்கு கத்திக்குத்து
முன்விரோதம் காரணமாக வாலிபர்களை கத்தியால் குத்திய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த மணவாளநகர் கருணாநிதி தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவருடைய மகன் சூர்யா(வயது 22). நேற்று முன்தினம் சூர்யா, அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் பிரவீன்(19) என்பவருடன் தனக்கு சொந்தமான மினி வேனில் கீழ்நல்லாத்தூர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு கியாஸ் சிலிண்டரை வினியோகம் செய்துவிட்டு மீண்டும் மணவாளநகர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிரே 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த சுகுமார், பாலாஜி, நீலகண்டன், வெங்கட் ஆகிய 4 பேரும் சேர்ந்து ஏற்கனவே தங்களுக்குள் இருந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக்கொண்டு சூர்யாவையும், நவீனையும் தகாத வார்த்தையால் பேசி கையால் தாக்கினர்.
மேலும் இருவரையும் பாட்டில் மற்றும் கத்தியாலும் குத்தியதுடன், கொலை மிரட்டலும் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் காயம் அடைந்த நண்பர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்த புகாரின்பேரில் திருவள்ளூர் தாலுகா போலீசார் தலைமறைவாக உள்ள சுகுமார், பாலாஜி, நீலகண்டன, வெங்கட் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story