குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்க கோரி ஊட்டியில் நகராட்சி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்க கோரி ஊட்டியில் நகராட்சி நிரந்தர, ஒப்பந்த பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட நகராட்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஊழியர் சி.ஐ.டி.யு. சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சேகர் தலைமை தாங்கினார்.
மாவட்ட தலைவர் சங்கரலிங்கம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் நகராட்சியில் பணிபுரியும் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக மாதந்தோறும் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் நிர்வாகி பழனிசாமி, ஊட்டி நகராட்சியில் பணிபுரியும் நிரந்தர மற்றும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் சேகர் கூறியதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதல் துப்புரவு பணியாளர்களை பணியில் அமர்த்த வேண்டும். தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு, அவர்கள் ஓய்வு பெறும் நாளன்றே பணிக்கொடையை முழுவதும் வழங்க வேண்டும். தொழிலாளர்கள் மீது வேலைபளுவை திணிக்கக்கூடாது. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வார விடுமுறை வழங்க வேண்டும். வீடுகளுக்கு நேரடியாக சென்று குப்பை மற்றும் கழிவுகளை சுமந்து செல்லும் முறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story