மோடியை எதிர்க்க நாடாளுமன்ற தேர்தலில் பலமான கூட்டணி அமையும் - வசந்தகுமார் எம்.எல்.ஏ. பேட்டி


மோடியை எதிர்க்க நாடாளுமன்ற தேர்தலில் பலமான கூட்டணி அமையும் - வசந்தகுமார் எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 24 July 2018 4:45 AM IST (Updated: 24 July 2018 2:15 AM IST)
t-max-icont-min-icon

நரேந்திர மோடியை எதிர்க்க வரும் நாடாளுமன்ற தேர்தலில் பலமான கூட்டணி அமைக்க உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் வசந்தகுமார் எம்.எல்.ஏ. கூறினார்.

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் கட்சியின் துணைத்தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமாகிய வசந்தகுமார் கலந்து கொண்டார். முன்னதாக ராஜபாளையம் பழைய பஸ் நிலையம் எதிரே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:–

அடுத்த மாதம்(ஆகஸ்டு) 22–ந் தேதி காங்கிரஸ் கட்சியின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ராகுல் காந்தியை சந்திக்க உள்ளோம்.

நாடாளுமன்றத்தில் மோடியை ராகுல் காந்தி கட்டித்தழுவியது அரசியல் நாகரிகம், அன்பின் வெளிப்பாடு. இதை சிலர் விமர்சனம் செய்வது அவர்களது அறியாமையை காட்டுகிறது. மோடியை எதிர்க்க வேண்டும், நாட்டு மக்கள், விவசாயிகள், வியாபாரிகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக வரும் நாடாளுமன்ற தேர்தலில் பலமான கூட்டணி அமைக்க உள்ளோம். தி.மு.க. வுடனான உறவு நிலையானது.

தமிழகத்தில் அசம்பாவித சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி சம்பவத்தில் அரசு முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டிருந்தால் 13 உயிர்கள் பலியாகி இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story