கும்பல் தாக்குதல், என்னால் இந்தியா திரும்ப முடியவில்லை மும்பை கோர்ட்டில் மெகுல் சோக்ஷி மனு
இந்தியா திரும்பினால் என் மீது கும்பல் தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதால் பிடிவாரண்டை ரத்து செய்ய வேண்டும் என்று மும்பை கோர்ட்டில் மெகுல் சோக்ஷி மனு தாக்கல் செய்துள்ளார்.
மும்பை,
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரத்து 400 கோடி கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்ஷி ஆகியோர் வெளிநாடு தப்பி விட்டனர்.
இவர்கள் மீதான வழக்கை மும்பையில் உள்ள பணமோசடி தடுப்பு சிறப்பு கோர்ட்டு விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் மெகுல் சோக்ஷிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில் மெகுல் சோக்ஷி சார்பில் தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டு உள்ள ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை ரத்து செய்யுமாறு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தற்போதைய சூழ்நிலையில் நிறுவனத்தை தொடர்ந்து நடத்துவது சாத்தியமற்றது என்பதால், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. மேலும் கடன் பெற்றவர்களிடம் பணத்தை திரும்ப கொடுக்கவும் முடியவில்லை. அவர்கள் கிளர்ச்சியில் ஈடுபட வாய்ப்பு உள்ளதால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது.
இந்தியாவில் மக்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்படும் சம்பவங்கள் சமீப காலங்களாக அதிகரித்து வருகின்றன. பல்வேறு தரப்பினரும் என் மீது கோபத்தில் உள்ள காரணத்தால் இதேபோன்ற நிலை எனக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும் நான் ஒருபோதும் விசாரணையில் இருந்து விலகி ஓடவில்லை. முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன்.
உடல்நலக்குறைவு, பாஸ்போர்ட் ரத்து, உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை போன்ற முக்கிய காரணங்களால் இந்தியாவுக்கு திரும்ப முடியவில்லை.
எனவே எனக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 18-ந் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என தெரிகிறது.

Related Tags :
Next Story