நெல்லை கலெக்டர் அலுவலகம் அருகே அன்புச்சுவரில் இருந்து காற்றில் பறந்த துணிகள்
நெல்லை கலெக்டர் அலுவலக நுழைவு வாசல் அருகில் ‘அன்புச்சுவர்’ அமைக்கப்பட்டு உள்ளது.
நெல்லை,
நெல்லை கலெக்டர் அலுவலக நுழைவு வாசல் அருகில் ‘அன்புச்சுவர்’ அமைக்கப்பட்டு உள்ளது. அங்குள்ள காம்பவுண்டு சுவரையொட்டி தகர கூரை அமைக்கப்பட்டு, அங்கு இரும்பு தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. முந்தைய கலெக்டர் சந்தீப் நந்தூரி, இந்த அன்புச்சுவர் திட்டத்தை தொடங்கினார்.
இதில் ஒருவருக்கு தேவைப்படாத பொருட்களை போட்டுச் சென்றால், அதனை தேவைப்படுவோர் எடுத்துச் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதில் பெரும்பாலும் ஆடைகளை கொண்டு வந்து பலர் போட்டுச் செல்கின்றனர். அதில் நல்ல ஆடைகளை பலரும் எடுத்துச் செல்கின்றனர். ஒருசிலர் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், கிரிக்கெட் மட்டை போன்றவற்றையும் போட்டுச் செல்கின்றனர்.
இந்தநிலையில் தற்போது நெல்லை மாவட்டத்தில் சூறைக்காற்று வீசுவதால் அன்புச்சுவரில் உள்ள துணிகள் தூக்கி வீசப்படுகின்றன. அவை கொக்கிரகுளம் ரோட்டிலும், கலெக்டர் அலுவலக வளாகத்திலும் அங்குமிங்கும் பறந்து கீழே கிடக்கின்றன.
பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த திட்டத்தை நல்லமுறையில் செயல்படுத்த வேண்டும். பராமரிப்பாளர் ஒருவரை நியமித்து அங்கு போடப்படும் பொருட்கள், தேவைப்படுவோருக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story