தூத்துக்குடி கலவர வழக்கில் கைதான நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ஜாமீனில் விடுதலை
தூத்துக்குடி கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
நெல்லை,
தூத்துக்குடி கலவர வழக்கில் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி கலவரம்தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கலெக்டர் அலுவலக முற்றுகை போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் பல்வேறு வழக்குகள் பதிவுசெய்து பலரை கைது செய்தனர். தூத்துக்குடி சிப்காட் போலீசார் வழக்கு ஒன்றில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசுவையும் கைது செய்தனர். அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
ஜாமீனில் விடுதலைஇந்த நிலையில், 55 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்து வந்த வியனரசுக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை நேற்று முன்தினம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து நேற்று மதியம் அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
இதை அறிந்த நாம் தமிழர் கட்சியினர் மகளிர் பாசறை குயிலி நாச்சியார் தலைமையில் திரண்டு சிறை வளாகத்துக்கு வந்தனர். த.ம.மு.க. நெல்லை மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் கட்சி நிர்வாகிகளும் அங்கு வந்திருந்தனர். அவர்கள் வியனரசுக்கு வரவேற்பு கொடுத்து ஆழ்வார்திருநகரி அருகில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.