பாலம் கட்டும் பணிகளை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ஆய்வு


பாலம் கட்டும் பணிகளை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ஆய்வு
x
தினத்தந்தி 25 July 2018 4:00 AM IST (Updated: 25 July 2018 12:30 AM IST)
t-max-icont-min-icon

புதிய பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் சார்பாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், ரூ.79 லட்சம் மதிப்பில் புதிய பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் கழுவந்தோண்டி, தேவாமங்கலம், பெரியவளையம் ஆகிய கிராமங்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்ட பாலம் கடந்த 25 வருடத்திற்கு முன்பு இடிந்து விழுந்தது. புதிய பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் சார்பாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், ரூ.79 லட்சம் மதிப்பில் புதிய பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மூன்று கிராமங்களை இணைக்கும் வகையிலும் தார்சாலைகளும் அமைக்கப்படுகிறது. இந்நிலையில் பாலம் கட்டும் பணிகளை ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். அப்போது பணியினை விரைவாகவும், பாலத்தை உறுதியாக கட்ட வேண்டும் எனவும், மேலும் மழைக்காலம் தொடங்கு வதற்கு முன்பாக பாலம் கட்டும் பணியை முடித்து விட வேண்டும் என அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் அறிவுறுத்தினார். இதில் பொதுப்பணித்துறை பொறியாளர் விஜயன், ஒப்பந்ததாரரும், நகர செயலாளருமான செல்வராஜ், கூட்டுறவு சங்க தலைவர்கள் தங்கபிச்சை முத்து, கல்யாணசுந்தரம், மாவட்ட அம்மா பேரவை மனோகரன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணை செயலாளர் ஜெயசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story