அடுக்குமாடி குடியிருப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மனித சங்கிலி போராட்டம்
வியாசர்பாடியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பூர்,
சென்னை பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் 300 வீடுகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு, பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டன.
தற்போது இந்த அடுக்குமாடி குடியிருப்பின் கட்டிடங்கள் சிதிலமடைந்து விட்டன. இதனால் ஏற்கனவே அடுக்குமாடி குடியிருப்பை இடித்துவிட்டு புதிய அடுக்குமாடி குடியிருப்பை கட்ட தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி 13 மாடிகளுடன் 465 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு உள்பட பல்வேறு பிரச்சினைகள் இருப்பதால் 13 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை கட்டக்கூடாது என அங்கு வசித்து வரும் மக்கள் கூறுகின்றனர்.
புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்ட எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் சுமார் 50 பேர் வியாசர்பாடி குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில் அதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமானோர் முல்லை நகர் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ‘‘அரசும், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியமும் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு சுமுக தீர்வு காணவேண்டும். அதுவரை எங்களை இந்த இடத்தை விட்டு காலி செய்ய வற்புறுத்தக் கூடாது’’ என்றனர்.

Related Tags :
Next Story