கும்பகோணத்தில் வீட்டுக்கு ‘சீல்’ வைக்க முயன்றதால் முதியவர் மயங்கி விழுந்து சாவு
கும்பகோணத்தில், கோவில் இடத்துக்கு பல ஆண்டுகளாக வாடகை தராமல் பாக்கி வைத்திருந்தவரின் வீட்டுக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் சீல் வைக்க முயன்றனர். இதனால் வீட்டில் குடியிருந்த முதியவர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்தார்.
கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் தெற்கு வீதியை சேர்ந்தவர் தனசேகரன்(வயது 64). இவர் இந்த இடத்தில் தனது தந்தை காலத்தில் இருந்து வசித்து வருகிறார். இந்த இடம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமானது. இந்த இடத்துக்கான வாடகை தொகையை ஆண்டுதோறும் ஆதிகும்பேஸ்வரர் கோவிலுக்கு செலுத்தி வந்தார்.
இந்த நிலையில் தனசேகரன் குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த பல ஆண்டுகளாக வாடகை தொகை செலுத்தவில்லை என தெரிகிறது. இதனால் கோவில் நிர்வாகத்தினர் வாடகையை செலுத்த கூறி தனசேகரனுக்கு நோட்டீஸ் வழங்கினர். ஆனால் தனசேகரனால் வாடகையை செலுத்த முடியவில்லை.
இது குறித்து இந்து சமய அறநிலையத்துறையினர் தொடர்ந்த வழக்கு மயிலாடுதுறை இணை ஆணையர் நீதிமன்றத்தில் கடந்த 2015-ம் ஆண்டு நடைபெற்றது. அப்போது தனசேகரன், தான் பாக்கி வைத்திருந்த வாடகை தொகை ரூ.2 லட்சத்தை விரைவில் செலுத்துவதாக உறுதி அளித்தார். பின்னர் 2016-ம் ஆண்டு ரூ.1 லட்சத்து 37 ஆயிரம் செலுத்தினார்.
இந்த நிலையில் தனசேகரனுக்கு சர்க்கரை நோய், சிறுநீரக பாதிப்பு ஆகியவை ஏற்பட்டது. இதனால் அவர் வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வந்தார். மேலும் அவர் வீட்டில் இருந்தபடியே சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார். எனவே கோவிலுக்கு செலுத்த வேண்டிய வாடகை நிலுவைத் தொகையை அவர் செலுத்தவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில் தனசேகரனிடம் வாடகை பாக்கித் தொகையை கேட்டு கோவில் நிர்வாகத்தினர் மீண்டும் நோட்டீஸ் வழங்கினார். அதற்கும் அவர் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை என தெரிகிறது. இதைத்தொடர்ந்து வாடகை பாக்கி ரூ.80 ஆயிரத்தை செலுத்த தவறிய காரணத்துக்காக மயிலாடுதுறை இணை ஆணையர், தனசேகரன் வீட்டை காலி செய்து பூட்டி ‘சீல்’ வைக்க உத்தரவிட்டார்.
இதனால் நேற்று காலை இந்து சமய அறநிலையத்துறை கும்பகோணம் உதவி ஆணையர் இளையராஜா, கோவில் செயல் அலுவலர் கவிதா மற்றும் வருவாய்த்துறையினர், போலீசாருடன் தனசேகரன் வீட்டுக்கு சென்றனர். பின்னர் அவர்கள் தனசேகரனின் வீட்டுக்கு ‘சீல்’ வைக்க வந்ததாக கூறி வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து தெருவில் வைத்தனர்.
தனது கண் முன்னே அதிகாரிகள் வீட்டில் இருந்த பொருட்களை எடுத்து வெளியில் வைத்ததால் இனி எங்கு சென்று குடியிருப்போம் என அதிர்ச்சி அடைந்த தனசேகரன் திடீரென தனது வீட்டிலேயே மயங்கி விழுந்து இறந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் கதறி அழுதபடி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து கும்பகோணம் தாசில்தார் வெங்கடாசலம், துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசமூர்த்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்குமார், மகாதேவன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து தனசேகரனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனால் அறநிலையத்துறையினர் வீட்டுக்கு சீல் வைக்கும் பணியை தற்காலிகமாக கைவிட்டனர். தனசேகரனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது.

Related Tags :
Next Story