பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x
தினத்தந்தி 25 July 2018 4:00 AM IST (Updated: 25 July 2018 2:30 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் சுந்தரவல்லி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர்,

கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் ரேஷன்கார்டு, வேலைவாய்ப்பு, கடனுதவி, குடிநீர் வசதி, சாலை வசதி, வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்றுகொண்ட கலெக்டர் அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

பின்னர் அவர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 21 முஸ்லிம் மகளிர், சுய தொழில் புரிய ரூ. 1 லட்சத்து 41 ஆயிரத்துக்கான உதவித்தொகைக்கான காசோலையை பயனாளிகளுக்கு வழங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story