காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை பா.ஜனதா உடைத்திருக்கும் உத்தவ் தாக்கரே சொல்கிறார்
மாநில அரசுக்கு நாங்கள் ஆதரவளிக்காமல் இருந்திருந்தால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை பா.ஜனதா உடைத்திருக்கும் என்று உத்தவ் தாக்கரே கூறினார்.
மும்பை,
சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில், உத்தவ் தாக்கரே அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
2014-ம் ஆண்டைய மராட்டிய சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா ஆட்சி அமைத்தது. அந்த அரசு நீடிக்க நாங்கள் ஆதரவு அளித்தோம். ஒருவேளை நாங்கள் ஆதரவு அளிக்காமல் இருந்திருந்தால், ஆட்சியை தக்க வைத்து கொள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை பா.ஜனதா உடைத்திருக்கும்.
மற்ற மாநிலங்களில் செய்ததுபோல் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள அனைத்து குறுக்கு வழிகளையும் பா.ஜனதா கையாண்டிருக்கும்.
எடுத்துக்காட்டாக திரிபுராவில் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளை உடைத்தது போல நடந்திருக்கும்.
2-ஜி போன்ற மிகப்பெரிய ஊழல் குறித்த தகவல்கள் வெளிவரும்போது, நாட்டின் மரியாதை மிகவும் குறைந்தது. இது இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இந்த ஊழல் பரபரப்பாக பேசப்பட்டது.
கடந்த 60 ஆண்டு ஊழல்கள் குறித்து பா.ஜனதா பேசுகிறது. ஆனால் அந்த ஊழல்களை நிரூபிக்க முடிந்ததா?. உண்மையில் ஊழல் நடந்திருந்தால் அதை நிரூபித்து காட்ட வேண்டு்ம்.
2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு வாக்களித்ததன் மூலம் மக்கள் தவறு செய்யவில்லை. ஆனால் மக்கள் ஏமாற்றப்பட்டு விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜனதாவின் 4 ஆண்டு ஆட்சியில் அங்கம் வகித்ததால் சிவசேனாவுக்கு கிடைத்த நன்மை என்ன என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “இதன் மூலம் ஒரு அரசை எப்படி நடத்தவேண்டும் என்ற அனுபவம் நமக்கு கிடைக்கிறது. என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது புதிய திட்டங்களை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது தெரிகிறது.
ஆட்சி அதிகாரம் நமது(சிவசேனா) வசம் வரும், மக்களும் அதை தான் முடிவு செய்திருக்கிறார்கள்.
இதுவரை மற்ற அனைத்து கட்சிகளின் ஆட்சி அனுபவத்தையும் மக்கள் பெற்றிருக்கிறார்கள் என்று நம்புகிறேன். ஆனால் சிவசேனாவின் ஆட்சி எப்படி இருக்கும் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த அனுபவத்தை அவர்களுக்கு கொடுக்கவேண்டும் என்பதற்காக தான் ஆட்சி அதிகாரத்தை வேண்டுகிறேன்” என்றார்.

Related Tags :
Next Story