தபால்துறையில் போஸ்டல் ஏஜென்ட் பணி


தபால்துறையில் போஸ்டல் ஏஜென்ட் பணி
x
தினத்தந்தி 25 July 2018 12:50 PM IST (Updated: 25 July 2018 12:50 PM IST)
t-max-icont-min-icon

தபால் துறையில் சேவைகளை துரிதப்படுத்தும் புது முயற்சியாக ஓ.பி.ஏ. எனப்படும் ‘அவுட்சோர்ஸ்டு போஸ்டல் ஏஜென்ட்’ பணிவாய்ப்புக்கு விண்ணப்பிக்க சென்னை அண்ணா சாலை தலைமை தபால் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

வெளியில் இருந்தபடி தபால்துறைக்கான தபால்கள் மற்றும் பார்சல்களை பெறவும், வினியோகிக்கவும் இந்த ஏஜென்ட் பணிவாய்ப்பு வழி செய்கிறது.

குறிப்பிட்ட எடையை கையாளுவதற்கேற்ப விதிமுறைப்படி ஊதியம் பெற்றுக் கொள்ள முடியும். இந்த பணிக்கு பிளஸ்-2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட மாதிரியான சுய விவர பட்டியலுடன், தேவையான சான்றுகள் இணைத்து, அண்ணாசாலை தலைமை தபால் நிலைய முகவரிக்கு 31-7-2018-ந் தேதிக்குள் தபாலில் விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் வாகனம் மற்றும் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பதுடன், கணினி அறிவு, ஸ்மார்ட்போன் மற்றும் இன்டெர்நெட் இணைப்பு பெற்றிருப்பது அவசியமாகும். நேர்காணல் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் சேர்க்கப்படுவார்கள். இது பற்றிய விவரங்களை 044-28520923 என்ற தொலைபேசி எண்ணிலும், doannaroadhpo.tn@indiapost.gov.in என்ற மெயில் முகவரியிலும் கேட்டுப் பெறலாம். 

Next Story