தூத்துக்குடியில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்: வெளியூர் சரக்கு போக்குவரத்து முடங்கியது 25 ஆயிரம் டன் உப்பு தேக்கம்


தூத்துக்குடியில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்: வெளியூர் சரக்கு போக்குவரத்து முடங்கியது 25 ஆயிரம் டன் உப்பு தேக்கம்
x
தினத்தந்தி 25 July 2018 1:36 PM IST (Updated: 25 July 2018 1:36 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக வெளியூர்களுக்கு கொண்டு செல்லப்படும் சரக்கு போக்குவரத்து முடங்கி உள்ளது. இதனால் 25 ஆயிரம் டன் உப்பு தேங்கியுள்ளது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக வெளியூர்களுக்கு கொண்டு செல்லப்படும் சரக்கு போக்குவரத்து முடங்கி உள்ளது. இதனால் 25 ஆயிரம் டன் உப்பு தேங்கியுள்ளது.

வேலைநிறுத்தம்

இந்தியா முழுவதும் லாரி உரிமையாளர்கள் கடந்த 20-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

டீசல் விலை உயர்வை கண்டித்தும், காப்பீட்டு தொகை உயர்வு, சுங்கச்சாவடி கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், பழைய சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 5-வது நாளாக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட்டு உள்ளனர்.

இதனால் தூத்துக்குடியில் சுமார் 4 ஆயிரம் லாரிகள் நிறுத்தப்பட்டு உள்ளன. தூத்துக்குடியில் பெரும்பாலான லாரிகள் ஓடாததால் ரோடு வெறிச்சோடி காணப்பட்டது.

தேங்கிய சரக்குகள்

வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் சரக்குகள், முழுமையாக தேங்கி உள்ளது. அதே நேரத்தில் உள்ளூர் நிறுவனங்களுக்கு சில லாரிகள் மூலம் சரக்குகள் கொண்டு செல்லப்படுகிறது.

இறக்குமதி செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான கண்டெய்னர்கள் தேங்கி உள்ளன.

இந்த கண்டெய்னர்களை துறைமுகத்தில் இருந்து லாரிகள் மூலம் சரக்கு பெட்டக முனையங்களுக்கு கொண்டு சென்று தேக்கி வைத்து உள்ளனர்.

உப்பு தேக்கம்

அதே போன்று தூத்துக்குடியில் இருந்து தினமும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்கள், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு 300 லாரிகளில் உப்பு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டு வந்தது. லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தால் சுமார் 25 ஆயிரம் டன் உப்பு தேங்கி உள்ளது.

தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டுக்கு வழக்கம்போல் ஒட்டன்சத்திரம், பாவூர்சத்திரம், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காய்கறிகள் லாரி மூலம் கொண்டு வரப்படுகிறது.

இதனால் காய்கறி தட்டுப்பாடு எதுவும் ஏற்படவில்லை.

Next Story