அத்தியாவசிய அமிலங்கள்
நம் வாழ்வியலோடு ஒன்றிணைந்த அமிலங்களை யும், அதன் சில குணநலன்களையும் காண்போம்...
மழை நீரின் pH அளவு 5.6-க்கும் குறைவாக இருந்தால் அது அமில மழை.
அமில மழையில் கந்தகம் அமிலம், நைட்ரிக் அமிலம் போன்ற அமிலங்கள் காணப்படுகின்றன.
சல்ப்யூரிக் அமிலம் வேதிப் பொருட்களின் அரசன் என்று அழைக்கப்படுகிறது.
மூன்று பங்கு ஹைட்ரோ குளோரிக் அமிலம் (HCL), ஒரு பங்கு நைட்ரிக் அமிலம் கலந்தால் ராஜ திராவகம் கிடைக்கும்.
தங்கம் ராஜ திராவகத்தில் மட்டுமே கரையும்.
பினாப்தலின் தயாரிக்க உதவுவது - தாலிக் அமிலம்.
பீனாலின் வேறு பெயர் - கார்பாலிக் அமிலம்.
மயக்க மருந்து தயாரிக்க உதவுவது - பார்பியூரிக் அமிலம்.
கார் பேட்டரியில் உள்ள அமிலம் - சல்ப்யூரிக்.
Related Tags :
Next Story