ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ.9 லட்சம் மதிப்பில் குழந்தை வளர்ச்சியை கண்டறிவதற்கான கருவிகள் அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்


ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ.9 லட்சம் மதிப்பில் குழந்தை வளர்ச்சியை கண்டறிவதற்கான கருவிகள் அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்
x
தினத்தந்தி 26 July 2018 3:30 AM IST (Updated: 25 July 2018 5:55 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் வைத்து, 3 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ.9 லட்சம் மதிப்பிலான குழந்தை வளர்ச்சியை கண்டறிவதற்கான கருவிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் வைத்து, 3 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ.9 லட்சம் மதிப்பிலான குழந்தை வளர்ச்சியை கண்டறிவதற்கான கருவிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

நவீன ஸ்கேன் கருவி 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, கற்பகால குழந்தை வளர்ச்சியை பரிசோதிக்கும் அதிநவீன ஸ்கேன் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு, 3 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தலா ரூ.3 லட்சம் மதிப்பிலான குழந்தை வளர்ச்சியை கண்காணிக்கும் நவின ஸ்கேன் மற்றும் பல்வேறு கருவிகளை வழங்கினார்.

அதன் பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது;–

குழந்தை வளர்ச்சி 

கிராமப்புற மக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை வழங்கும் வகையில், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு நவீன கருவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை, முள்ளக்காடு, மாப்பிள்ளையூரணி ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தலா ரூ.3 லட்சம் மதிப்பிலான கர்ப்பிணி பெண்களுக்கு அவர்களுடைய கர்ப்ப வாரம் மற்றும் குழந்தை வளர்ச்சியை பரிசோதனை செய்யும் கருவிகள் வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம், கர்ப்பகாலத்தில் குழந்தைகளின் வளர்ச்சியை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.

குழந்தை பிறந்தவுடன் பரிசோதனை செய்வதற்கான ரூ.75 ஆயிரம் மதிப்பிலான பல்ஸ் ஆக்ஸிலேட்டர் கருவி மற்றும் ரூ.80 ஆயிரம் மதிப்பிலான ஆட்டோகிளேப் எந்திரம் ஆகியவைகள் மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் கிராமப்புற மக்களுக்கு கர்ப்பிணி மற்றும் குழந்தைகளுக்கு கூடுதல் நவீன சிகிச்சை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

யார்–யார்?

இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான்வர்க்கீஸ், உதவி கலெக்டர் பிரசாந்த், முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், உதவி கலெக்டர் (பயிற்சி) அனு, மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், திட்ட இயக்குனர், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை தனபதி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் கீதாராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story