நெல்லையில் வருகிற 10–ந் தேதி வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் கூட்டம்
வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டம் நெல்லையில் வருகிற 10–ந் தேதி நடக்கிறது.
நெல்லை,
வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டம் நெல்லையில் வருகிற 10–ந் தேதி நடக்கிறது.
இதுதொடர்பாக நெல்லை வருங்கால வைப்பு நிதி உதவி ஆணையாளர் வீரேஷ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறிஇருப்பதாவது:–
குறைதீர்க்கும் கூட்டம்
நெல்லை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் வருகிற 10–ந் தேதி (வெள்ளிக்கிழமை) மண்டல ஆணையாளர் சனத்குமார் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
இதில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள் மற்றும் தொழில் அதிபர்களின் குறைகள் ஏதேனும் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். காலை 10.30 மணிக்கு உறுப்பினர்களுக்கும், மாலை 3 மணிக்கு தொழில் அதிபர்களுக்கும், 4 மணிக்கு வருங்கால வைப்பு நிதி விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுக்கும் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும்.
மனுக்கள் அனுப்பலாம்
அதற்குரிய மனுக்களை மண்டல ஆணையாளர், வருங்கால வைப்பு நிதி நிறுவனம், என்.ஜி.ஓ. ‘பி’ காலனி, திருநெல்வேலி –7 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மனுக்கள் வருகிற 31–ந் தேதிக்குள் அலுவலகத்துக்கு கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். மனுக்களை அனுப்பியவர்கள் அது தொடர்பாக குறைதீர்க்கும் நாளில் மண்டல ஆணையாளர் சனத்குமாரை நேரில் சந்தித்து குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story