கல்லணை, தஞ்சை, பகுதியில் வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்க பாதுகாப்பு உபகரணங்களுடன் 3 குழுக்கள்
கல்லணை, தஞ்சை, திருவையாறு பகுதியில் ஆற்று வெள்ளத்தில் சிக்குபவர்களை மீட்க பாதுகாப்பு உபகரணங்களுடன் 3 குழுக்கள் சென்றது. இந்த குழுக்களை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் வழியனுப்பி வைத்தார்.
தஞ்சாவூர்,
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் காவிரியில் அதிக அளவு திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் தண்ணீர் வேகமாக செல்வதால் பொதுமக்கள் யாரும் குளிக்க வேண்டாம், புகைப்படம் எடுக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை, போலீசார் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தொடர்ந்து ஆறுபகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும் வெள்ள அபாய எச்சரிக்கை காரணமாக அனைத்து ஆறுகளில் பாதுகாப்பு பணிக்காக மாநில பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்ற போலீசார் தஞ்சையில் இருந்து சென்றனர். அவர்களுக்கு தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் 20 வகையான உபகரணங்களை வழங்கி அனுப்பி வைத்தார்.
பின்னர் போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மாநில பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்ற போலீசாருக்கு, பேரிடர் காலத்தில் பயன்படுத்துவதாக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பயிற்சி அளிக்கப்பட்டவர்கள் 3 குழுக்களாக பிரிந்து கல்லனை, திருவையாறு, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் பாதுகாப்புபணியில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் இருப்பார்கள்.
பொது மக்கள் யாராவது ஆற்றில் நீச்சல் தெரியாமல் சிக்கிக்கொண்டால், அருகில் உள்ளவர்கள் 100 என்ற எண்ணுக்கு தகவல் அளிக்கலாம். உடனடியாக பயிற்சி பெற்றவர்கள் அங்கு வந்து ஆற்றில் விழுந்தவர்களை காப்பாற்றிவிடுவார்கள். மேலும் அனைத்து ஆறுகளிலும் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் யாரும் செல்பி, புகைப்படம் எடுக்க கூடாது, இளைஞர்கள் சாகச நிகழ்ச்சி என்று டைவ் அடிக்க கூடாது.
மேலும் பாதுகாப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதில் சப்–இன்ஸ்பெக்டர் தலைமையில் நான்கு போலீசார் இருப்பார்கள். ஆற்றின் கரையோரங்களில் பாதுகாப்பாக இருப்பது குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தீயணைப்பு வீரர்களையும் இப்பணியில் ஈடுபடுத்தவுள்ளோம்’’ என்றார்.
இதில் கூடுதல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவிசேகரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஜெயச்சந்திரன், முருகேசன், இன்ஸ்பெக்டர்கள் பழனிச்சாமி, இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story