54 இடங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா செயல்பாட்டை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்


54 இடங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா செயல்பாட்டை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 26 July 2018 4:00 AM IST (Updated: 26 July 2018 12:19 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் 54 இடங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் தொடங்கி வைத்தார்.

திருவாரூர்,

திருவாரூர் நகர பகுதிகளில் குற்றங்களை தடுக்க வசதியாக போலீஸ் துறை சார்பில் 54 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளை கண்காணிக்க, திருவாரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

புதிதாக பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் நேற்று தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

திருவாரூர் நகரில் குற்றங்களை தடுக்க 54 இடங் களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்களின் செயல்பாடுகளை கண்காணிக்க திருவாரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் கட்டுப்பாட்டு அறை செயல்படு கிறது.

இதேபோல் விரைவில் மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். மாவட்டம் முழுவதும் வீடுகள், வர்த்தக நிறுவனங்களில் 475 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகள் 4,268 பேரின் ஓட்டுனர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 75 சதவீத வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜான்ஜோசப், துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன், இன்ஸ்பெக்டர்கள் லெக்குமணன், கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், வெங்கடேஷ் ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story