நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்


நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 26 July 2018 3:15 AM IST (Updated: 26 July 2018 12:21 AM IST)
t-max-icont-min-icon

கொழுமத்தில் நடந்த சிறப்பு மக்கள் தொடர்பு முகாமில் ரூ.43¼ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வழங்கினார்.

மடத்துக்குளம், 


தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் பொதுமக்களை சென்றடையும் வகையில், பொதுமக்களின் குறைகளை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையிலும், மாதம் ஒரு கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி திருப்பூர் மாவட்ட கலெக்டரின் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் மடத்துக்குளம் தாலுகா கொழுமம் கிராமத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது.

முகாமுக்கு மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

பின்னர் 405 பயனாளிகளுக்கு ரூ.43¼ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கிபேசினார். முன்னதாக வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, சமூகநலத்துறை, கால்நடைத்துறை போன்ற அரசு துறைகளின் மூலம் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை அவர் பார்வையிட்டார். முகாமில் உடுமலை ஆர்.டி.ஓ. அசோகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், மகளிர் திட்ட இயக்குனர் ஈஸ்வரன், சமூகபாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் ராகவேந்திரா, மடத்துக்குளம் தாசில்தார் கலாவதி, மடத்துக்குளம் ஒன்றிய ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். 

Next Story