அப்துல்கலாம் நினைவிடத்துக்கு அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வருகை உற்சாக வரவேற்பு அளிக்க மாவட்ட செயலாளர் ஏற்பாடு


அப்துல்கலாம் நினைவிடத்துக்கு அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வருகை உற்சாக வரவேற்பு அளிக்க மாவட்ட செயலாளர் ஏற்பாடு
x
தினத்தந்தி 26 July 2018 3:30 AM IST (Updated: 26 July 2018 1:59 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடத்துக்கு வருகைதர உள்ள அ.ம.மு.க. துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க மாவட்ட செயலாளர் வ.து.ந.ஆனந்த் ஏற்பாடு செய்துள்ளார்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் தங்கச்சிமடம் ஊராட்சிக்கு உட்பட்ட பேய்க்கரும்பு கிராமத்தி முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மணிமண்டபம் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு அப்துல்கலாம் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு செல்கின்றனர்.

இந்த நிலையில் நாளை (வெள்ளிக்கிழமை) அப்துல் கலாம் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், அரசு உயர் அதிகாரிகளும், பள்ளி கல்லூரி மாணவ–மாணவிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டு அவரது நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்த உள்ளனர். இந்த விழாவில் கலந்து கொண்டு அப்துல் கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று (வியாழக்கிழமை) விமானம் மூலம் மதுரை வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் ராமேசுவரம் வர உள்ளார். இரவு ராமேசுவரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கும் அவர் வெள்ளிக்கிழமை காலை அப்துல்கலாம் நினைவிடத்துக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் சென்று அஞ்சலி செலுத்துகிறார்.

ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வருகை தரும் டி.டி.வி.தினகரனுக்கு மாவட்டம் முழுவதும் அ.ம.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க அக்கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் மாவட்ட செயலாளர் வ.து.ந.ஆனந்த் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதில் முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன், அமைப்பு செயலாளரும், பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளருமான ஜி.முனியசாமி, மாநில மருத்துவரணி செயலாளர் டாக்டர் முத்தையா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன், முன்னாள் மாவட்ட செயலாளர் சோமாத்தூர் சுப்பிரமணியன், ராமேசுவரம் முன்னாள் நகரசபை தலைவர் அர்சுனன், மாநில மகளிரணி அணி துணை செயலாளர் வக்கீல் கவிதா சசிக்குமார், மாவட்ட அவை தலைவர் வக்கீல் அரிதாஸ், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் ஆர்.கே.ரமலி, நகர் சிறுபான்மை பிரிவு செயலாளர் பைராம்கான், ஒன்றிய செயலாளர்கள் மண்டபம் ஸ்டாலின் ஜெயச்சந்திரன், ராமநாதபுரம் முத்தீசுவரன், நகர் செயலாளர் ரஞ்சித்குமார், திருப்புல்லாணி சங்கர் ஜெயச்சந்திரன் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நகர், ஒன்றிய, பேரூர், ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர்.

இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் முதல் ராமேசுவரம் வரை டி.டி.வி.தினகரனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கவும், அப்துல் கலாம் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவதற்கும் பல்வேறு ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் வது.ந.ஆனந்த் செய்து வருகிறார்.


Next Story