பெங்களூருவில் தொழில்நுட்ப முதலீட்டாளர்கள் மாநாடு - மந்திரி கே.ஜே.ஜார்ஜ்
பெங்களூருவில் தொழில்நுட்ப முதலீட்டாளர்கள் மாநாடு, நவம்பர் மாதம் நடக்கிறது என்று மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக தொழில்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
ஜெர்மனி நாட்டின் தூதர் குழுவினர் மரியாதை நிமித்தமாக என்னை நேரில் சந்தித்து பேசினர். திறன் மேம்பாட்டு பயிற்சி குறித்தும் அவர்கள் ஆலோசனை கூறினர். பெலகாவி, உப்பள்ளி, மைசூரு, சாம்ராஜ்நகர், மண்டியா உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டேன். நமது மாநிலத்தில் கட்டமைப்பு வசதிகள் நன்றாக உள்ளன.
சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் 1,400 ஏக்கர் பரப்பளவில் ஜவுளி, உணவு பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு தொழில் தொடங்க சில நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அங்கு மின்சாரம், தண்ணீர், சாலை போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அந்த பூங்காக்களுக்கு கபினி அணையில் இருந்து தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது. ரூ.4,500 கோடி மதிப்பீட்டில் மைசூருவில் புதிய தொழில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொழில் திட்டங்களுக்காக துமகூருவில் 10 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்த நிலங்களின் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. நில ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள் குறித்த காலத்திற்குள் தொழில் தொடங்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது. ஆனால் சில நிறுவனங்கள் நிலத்தை பெற்றுக்கொண்டு தொழில் தொடங்கவில்லை என்று புகார் வந்துள்ளது. அத்தகைய நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறோம்.
விளக்கம் சரியாக இல்லாவிட்டால், ஒதுக்கிய நிலம் திரும்ப பெறப்படும். தொழில் திட்டங்களை தொடங்க வசதியாக நில வங்கியை மாநில அரசு ஏற்கனவே ஏற்படுத்தியுள்ளது. வேலை வாய்ப்பு, பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டுமென்றால் நிலங்களை கையகப்படுத்த வேண்டும். நிலம் ஒதுக்காமல் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியாது.
தொழில் துறை சார்பில் தொழில்நுட்ப முதலீட்டாளர்கள் மாநாடு வருகிற நவம்பர் மாதம் 29-ந் தேதி தொடங்கி டிசம்பர் 1-ந் தேதி வரை 3 நாட்கள் பெங்களூருவில் நடக்கிறது. இதில் உலக அளவில் மென்பொருள் உற்பத்தி நிறுவனங்கள், உயிரி, நானோ தொழில்நுட்ப நிறுவனங்களின் உரிமையாளர்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாட்டு பணிகளை தொடங்கியுள்ளோம்.
புதிதாக தொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்களும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள உள்ளனர். கல்வி, சுகாதாரம், விவசாயத்துறை முதலீட்டாளர்களும், நிதி ஆயோக் அதிகாரிகளும் பங்கேற்க இருக்கிறார்கள். கர்நாடகத்தில் தொழில் தொடங்க வரும் முதலீட்டாளர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்க மாநில அரசு தயாராக உள்ளது. அன்னிய நேரடி முதலீட்டு வருகையில் கர்நாடகம் முதல் இடத்தில் உள்ளது. இவ்வாறு மந்திரி கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.

Related Tags :
Next Story