பெரம்பூரில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
பெரம்பூரில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் உள்பட திரளான பொதுமக்கள் அந்த கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பூர்,
சென்னை பெரம்பூர் முத்துமாரி அம்மன் கோவில் தெருவில் அரசு டாஸ்மாக் கடை மற்றும் பார் உள்ளது. இந்த கடையின் அருகில் கோவில் மற்றும் மார்க்கெட் அமைந்து உள்ளது. பெரம்பூர் மாநகர பஸ் நிலையம், ரெயில் நிலையத்துக்கும் இந்த வழியாகத்தான் பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
மேலும் கடைக்கு வரும் மதுபிரியர்களால் நெல்வாயல் தெரு, வடிவேல் தெரு, பாரதி தெருவைச் சேர்ந்த பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாகின்றனர்.
எனவே பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இந்த டாஸ்மாக் கடையை அகற்றும்படி அந்த பகுதி மக்கள், பலமுறை டாஸ்மாக் அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட திரளான பொதுமக்கள், டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி நேற்று அந்த கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த செம்பியம் போலீசார், கடைக்கு முன்பாக இரும்பு தடுப்புகளை ஏற்படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்துக்கு வந்த சென்னை டாஸ்மாக் உதவி மேலாளர் லிவிங்ஸ்டன், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், டாஸ்மாக் கடையை அகற்றுவது தொடர்பாக உயர்அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, அவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள், முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story