மராத்தா இடஒதுக்கீடு போராட்டத்தில் வாகனங்களுக்கு தீவைப்பு - மேலும் ஒருவர் பலியானதால் பதற்றம்
மராட்டியத்தில் மராத்தா சமுதாயத்தினரின் இடஒதுக்கீடு போராட்டத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
மும்பை,
மும்பையில் நடந்த முழு அடைப்பு போராட்டத்தில் பஸ்சுக்கு தீ வைத்தனர். மேலும் பஸ்கள், ரெயில்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். வன்முறையை தொடர்ந்து முழு அடைப்பு போராட்டம் பாதியில் வாபஸ் பெறப்பட்டது.
மராட்டியத்தில் 30 சதவீத மக்கள் தொகையை கொண்ட மராத்தா சமுதாயத்தினர் தங்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 16 சதவீத இடஒதுக்கீடு கேட்டு மாநிலம் முழுவதும் பல கட்டங்களாக அமைதி பேரணிகளை நடத்தினார்கள். இதனால் எந்த பலனும் கிட்டாத நிலையில், தங்கள் கோரிக்கைக்காக மாநில அரசை அடிபணிய வைப்பதற்கு தற்போது வன்முறை போராட்டங் களை முன்னெடுத்து வருகிறார்கள். கடந்த 23-ந்தேதி முதல் நடந்து வரும் மராத்தா சமுதாயத்தினரின் இந்த போராட்டம் மிக தீவிரம் அடைந்து உள்ளது. இவர்களது போராட்டத் தில் மாநிலம் முழுவதும் வன்முறை வெடித்தது.
அவுரங்காபாத்தில் காகாசாகேப் ஷிண்டே (வயது27) என்ற வாலிபர் கோதாவரி ஆற்றில் குதித்து உயிரை மாய்த்தார். இதைத்தொடர்ந்து, நேற்றுமுன்தினம் நடந்த போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அவுரங்காபாத்தில் விஷம் குடித்தும், ஆற்றில் குதித்தும் இருவர் தற்கொலைக்கு முயன்றனர். பீட் பகுதியில் கட்டிடத்தின் மீது ஏறி இருவர் தற்கொலை மிரட்டல் விடுத்தனர். இவர்களில் விஷம் குடித்த அவுரங்காபாத்தை சேர்ந்த ஜெகநாத் சோனவானே (55) என்பவர் நேற்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது அவுரங்காபாத்தில் மேலும் பதற்றத்தை உண்டாக்கியது.
இதையடுத்து, நேற்றும் 3-வது நாளாக மாநிலம் முழுவதும் மராத்தா சமுதாயத்தினர் தங்களது போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டன. தங்களது போராட்டத்துக்கு வலுசேர்க்கும் விதமாக மாநில தலைநகர் மும்பை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களான தானே, பால்கர், ராய்காட் மாவட்டங்களில் நேற்று முழுஅடைப்பு போராட்டத்துக்கு மராத்தா சமுதாயத்தினர் அழைப்பு விடுத்து இருந்தனர்.
இதையடுத்து நேற்று மும்பை உள்ளிட்ட மேற்கண்ட இடங்களில் முழுஅடைப்பு போராட்டம் நடந்தது. மராத்தா சமுதாயத்தினர் பல இடங்களில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். மும்பையை பொறுத்தவரை பெரும்பாலான இடங்களில் வழக்கம் போல கடைகள் அனைத்தும் திறந்து இருந்தன. பஸ், ஆட்டோ, டாக்சி மற்றும் ரெயில்கள் இயங்கின. மதிய நேரத்தில் மட்டும் வழக்கத்தை விட குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்களை சாலைகளில் காண முடிந்தது.
பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களும் திறந்து இருந்தன. எனவே முழு அடைப்பு பதற்றத்துக்கு மத்தியில் மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கு சென்று திரும்பினர்.
செம்பூர், காட்கோபர் மேற்கு, மான்கூர்டு, தேவ்னார், சயான், கலினா, ஜோகேஸ்வரி உள்ளிட்ட இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மான்கூர்டில் மாநகராட்சி பஸ் தீ வைத்து எரிக்கப்பட்டது. பயணிகளை இறக்கி விட்டு போராட்டக்காரர்கள் பஸ்சை எரித்தனர். இதேபோல பல பஸ்கள் மற்றும் ரெயில்கள் மீது கல்வீசப்பட்டன. இதனால் பயணிகள் பதற்றத்தில் உறைந்தனர். போராட்டம் காரணமாக சில பகுதிகளில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மராத்தா சமுதாயத்தினர் மும்பையில் சயான்- பன்வெல் நெடுஞ்சாலையில் மறியல் செய்தனர். செம்பூரில் கிழக்கு விரைவு சாலையிலும், மும்பை மேற்கு விரைவு சாலையிலும் வாகனங்களை மறித்தனர். இதனால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதற்கிடையே நேற்று பகல் முழுவதும் நடைபெற இருந்த போராட்டம் திடீரென பிற்பகல் 3 மணிக்கு வாபஸ் பெறப்பட்டது. அரசியல் சதி காரணமாக போராட்டம் வன்முறைக்கு திரும்பியதால் முழு அடைப்பு பாதியில் திரும்ப பெறப்பட்டதாக போராட்டக்குழுவை சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.
மும்பையில் 45 இடங்களில் போராட்டம் நடந்ததாகவும், வன்முறை தொடர்பாக 447 பேர் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். கைதானவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story