விண்வெளி வீராங்கனைகள்
அமெரிக்க விமானப் படையில் பணியாற்றிய லெப்டினன்ட் கர்னல் எலீன் காலின்ஸ், 1995-ல் நாசா விண்கல விமானிகளில் ஒருவராக மாறினார். அவரே முதல் பெண் விண்கல விமானி.
ரஷியாவின் தெரஸ்கோவாதான் விண்வெளியில் பறந்த முதல் வீராங்கனை. அவருடைய அப்பா ஒரு டிராக்டர் டிரைவர், அம்மா ஜவுளி தொழிற்சாலை பணியாளர். அம்மாவை போல அவரும் ஜவுளி ஆலையில் வேலை பார்த்துக்கொண்டே படித்தார். பாராசூட்டில் பறப்பதில் தெரஸ்கோவாவுக்கு அதிக ஆர்வம் இருந்தது. விண்வெளி வீராங்கனையாக அவர் தேர்ந்தெடுக்கப்பட அதுவும் முக்கிய காரணமாக இருந்தது. 1963-ல் ‘வாஸ்டாக் 6‘ விண்கலத்தில் அவர் பயணம் செய்தார். கிட்டத்தட்ட 3 நாட்கள் விண்வெளியில் செலவிட்ட அவர், 48 முறை உலகை வலம் வந்தார்.
அமெரிக்காவின் மேற்கு பகுதியை சேர்ந்த ஷன்னான் லூசிட், அவரது வயதை ஒத்த இளம்பெண்கள் சமைத்துக் கொண்டிருந்தபோது, வாயுக்களை கலந்து தண்ணீரை உருவாக்கலாம் என்பதை கண்டுபிடித்தார். 1960-களில் பெண்கள் சந்தித்து வந்த பல்வேறு தடைகளை மீறி, விண்வெளிக்கு செல்வதில் லூசிட் ஆர்வம் கொண்டிருந்தார். விண்வெளி வீரர் ஆவதற்கான பயிற்சி என்பது ராணுவ வீரர் ஆவதற்கான பயிற்சியைவிட மிகக் கடுமையானது. 1996-ம் ஆண்டில் ரஷிய விண்வெளி நிலையமான மிர்ரில் 188 நாட்களை லூசிட் செலவிட்டார்.
ஆனால், லூசிட் வளர்ந்த போராட்டமான காலம் தற்போது கொசம் கொஞ்சமாக மாறி வருகிறது. 1983-ம் ஆண்டில் சால்லி ரைட் அமெரிக்காவின் முதல் விண்வெளி வீராங்கனையாக விண்ணுக்குச் சென்றார். 1984-ல் கேதரின் சல்லிவன் விண்வெளியில் நடந்த முதல் அமெரிக்க பெண்ஆனார்.
நாசா ஊழியர்களில், தற்போதுபெண்கள் 33 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளனர். 1981-ம் ஆண்டுக்குப் பிந்தைய 18 ஆண்டுகளில் நாசா 94 விண்கலங்களை செலுத்தி உள்ளது. இதில் 57 முறை பெண்கள் பயணித்துள்ளனர். 1997- க்குப் பிறகு எல்லா விண்கலங்களிலும் குறைந்தது ஒரு விண்வெளி வீராங்கனையாவது இடம் பெற்று வந்துள்ளனர். உயிரியல், பொருள் அறிவியல், எலும்பு செல் ஆராய்ச்சி ஆகியவற்றில் ஈடுபடும் நோக்கத்துடன் 1992-ல் எண்டவர் விண்கலத்தில் மருத்துவரான மே ஜெமிசன் சென்றார். விண்வெளி சென்ற முதல் கருப்பினப் பெண் அவர்.
அமெரிக்க விமானப் படையில் பணியாற்றிய லெப்டினன்ட் கர்னல் எலீன் காலின்ஸ், 1995-ல் நாசா விண்கல விமானிகளில் ஒருவராக மாறினார். அவரே முதல் பெண் விண்கல விமானி. 1999-ம் ஆண்டில் விண்கலத்தை செலுத்தும் முதன்மை விமானியாகவும் ஆனார். 1998-ம் ஆண்டில் வரலாற்றிலேயே முதன் முறையாக விண்கலத்தை செலுத்துவதற்கான பொறுப்பாளர், அவரது உதவியாளர், விண்கல இயக்குநர், விண்கலம் மற்றும் கட்டுப்பாட்டு அறை இடையிலான தொடர்பாளர் ஆகிய அனைவரும் பெண்களாக நியமிக்கப்பட்டனர்.
கல்பனா சாவ்லாதான், விண்வெளியில் பறந்த முதல் இந்திய வம்சாவளி பெண். 1988-ம் ஆண்டு விண்வெளி பொறியியலில் முனைவர் ஆராய்ச்சி பட்டம் பெற்ற அவர், தொடர்ந்து நாசாவின் ஏம்ஸ் ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிய ஆரம்பித்தார். 1994-ம் ஆண்டில் விண்வெளியில் 32 நாட்கள் அவர் இருந்துள்ளார். அவருக்குப் பிறகு இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் விண்ணுக்குச் சென்றுள்ளார்.
Related Tags :
Next Story