கடலையில் ஏக்கருக்கு 400 கிலோ மகசூல்


கடலையில் ஏக்கருக்கு 400 கிலோ மகசூல்
x
தினத்தந்தி 26 July 2018 11:46 AM IST (Updated: 26 July 2018 11:46 AM IST)
t-max-icont-min-icon

இயற்கை வேளாண் முறையில் கடலைச்செடிக்கு சத்தூட்டம் கொடுப்பதால் பூச்சித்தாக்குதலும் குறைவாக இருக்கும். மகசூலும் அதிக அளவில் இருக்கும்.

கடலைக்கு அடி உரமாக சாணி எரு ஏக்கருக்கு 2 டன் இட வேண்டும். பின்பு 15-ம் நாள் ஊட்டமேற்றிய தொழுஉரம் 200 கிலோ, மண்புழு உரம் 400 கிலோ கலந்து தெளிக்க வேண்டும். பின்பு 22- ம் நாள் அல்லது பூக்கும் நேரம் பஞ்சகாவ்யா ஒரு தொட்டிக்கு 360 மில்லி, மீன் அமினோ அமிலம் தொட்டிக்கு 100 மில்லி என்ற விகிதத்தில் கலந்து ஏக்கருக்கு 6 தொட்டி (ஒரு தொட்டி என்பது 12 லிட்டர் டேங்க்) தெளிக்க வேண்டும்.

பூ பூக்கும் நேரம் மாலை நேரத்தில் தான் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அப்போது தான் மகரந்தச் சேர்க்கை நன்றாக நடைபெறும். மேலும், பூக்கள் அதிகம் உதிராது. பின்பு 40-ம் நாள் பஞ்சகாவ்யா ஒரு தொட்டிக்கு 360 மில்லி கலந்தும், மண்எண்ணெய் ஒரு தொட்டிக்கு 150 மில்லி என்ற அளவில் கலந்து கொண்டும் ஏக்கருக்கு 6 தொட்டி அளவில் தெளிக்க வேண்டும். பின்பு 70-ம் நாள் மேற்கண்ட கலவையுடன் சூடோமோனஸ் ஒரு தொட்டிக்கு 120 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். இதனால், இலைப்புள்ளி, இலைக்கருகல் நோய் வராமல் இருக்கும். இந்த முறையில் ஏக்கருக்கு 400 கிலோ கடலை மகசூல் கிடைக்கும். 

Next Story