இன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் கலெக்டர் அறிவிப்பு


இன்று அம்மா திட்ட முகாம் நடைபெறும் கிராமங்கள் கலெக்டர் அறிவிப்பு
x
தினத்தந்தி 27 July 2018 2:30 AM IST (Updated: 26 July 2018 7:04 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடக்க உள்ள கிராமங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) அம்மா திட்ட முகாம் நடக்க உள்ள கிராமங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;–

அம்மா திட்டமுகாம்

தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் உள்ள மக்களுக்கு அதிக சேவை வழங்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசால் அம்மா திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

தூத்துக்குடி தாலுகாவிற்கு சேர்வைக்காரன்மடம் கிராமத்திலும், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்கு இருவப்பபுரம் பகுதி–2 கிராமத்திலும், திருச்செந்தூர் தாலுகாவிற்கு அழகியமணவாளபுரம் கிராமத்திலும், சாத்தான்குளம் தாலுகாவிற்கு கோமானேரி கிராமத்திலும், கோவில்பட்டி தாலுகாவிற்கு இடைசெவல் பகுதி–1 கிராமத்திலும், விளாத்திகுளம் தாலுகாவிற்கு வாதலக்கரை கிராமத்திலும், எட்டயபுரம் தாலுகாவிற்கு தலைக்காட்டுபுரம் கிராமத்திலும், ஓட்டப்பிடாரம் தாலுகாவிற்கு சிந்தலக்கட்டை கிராமத்திலும், கயத்தாறு தாலுகாவிற்கு குதிரைகுளம் கிராமத்திலும் அம்மா திட்ட சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாம்கள் அந்தந்த தாசில்தார்கள் தலைமையில் நடக்க உள்ளது.

கோரிக்கை மனுக்கள்

இந்த முகாம்களில் மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டுமனை பட்டாக்கள், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு– இறப்பு சான்றுகள், சாதிச்சான்றுகள், மற்றும் வருவாய் துறையினரால் நிறைவேற்றப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்த மனுக்களை கொடுக்கலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story