9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கைது
திருநின்றவூர் அருகே 9-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஆவடி,
ஆவடி அடுத்த பட்டாபிராம் வள்ளலார் நகரை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 60). விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர் கடந்த மார்ச் மாதம் திருநின்றவூர் பகுதியில் தனது நண்பரை பார்க்க அங்குள்ள அரசு பள்ளி வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அந்த பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை பார்த்துள்ளார். அந்த சிறுமியிடம், ‘5 ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்னுடன் வா’ என்று ராமமூர்த்தி அழைத்துள்ளார். இதனால் சிறுமி பயந்து போய் பள்ளிக்கு சென்று ஆசிரியரிடம் கூறியுள்ளார். இதையடுத்து ஆசிரியர் வெளியே வந்து பார்த்துள்ளார். ஆனால் அதற்குள் ராமமூர்த்தி தப்பி சென்றுவிட்டார்.
கடந்த மாதம் (ஜூன்) 18-ந் தேதி பள்ளிக்கூட வாசலில் நின்றுகொண்டு அந்த சிறுமியை ராமமூர்த்தி அழைத்துள்ளார். உடனே சிறுமியின் தோழிகள் கூச்சலிட்டதால் அவர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். அடிக்கடி ராமமூர்த்தி தொல்லை கொடுத்து வந்ததால் பெற்றோரிடம் இதுகுறித்து அந்த சிறுமி கூறியுள்ளார்.
இதற்கிடையே நேற்று காலை திருநின்றவூர் அருகே உள்ள சிறுமியின் வீட்டிற்கு அருகே சென்ற ராமமூர்த்தி, மீண்டும் சைகை மூலம் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து தனது பெற்றோரிடம் சிறுமி கூறினார்.
உடனே அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து ராமமூர்த்தியை பிடித்து ஆவடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் ஷோபாராணி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து ராமமூர்த்தியை கைது செய்தனர். பின்னர் அவரை பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story