மந்திராலயாவில் பெண் தீக்குளிக்க முயற்சி
கந்துவட்டிக்காரர் தொல்லையால் மந்திராலயாவில் தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீசார் மீட்டனர்.
மும்பை,
மும்பை நரிமன்பாயிண்டில் உள்ள மராட்டிய தலைமை செயலகமான மந்திராலயா தற்கொலை களமாக மாறி வருகிறது. இந்தநிலையில், நேற்றுமுன்தினம் மந்திராலயாவுக்கு பெண் ஒருவர் வந்தார். அவர் மந்திராலயாவின் பூங்கா கேட் அருகே வந்ததும் திடீரென தான் கொண்டு வந்த மண்எண்ணெய் கேனை திறந்து கொண்டிருந்தார்.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர்.
உடனே ஓடிச்சென்று அந்த பெண்ணின் கையில் இருந்த மண்எண்ணெய் கேனை கைப்பற்றி விசாரித்தனர். இதில், அவரது பெயர் அல்கா கர்னாடே (வயது39) என்பதும், உஸ்மனாபாத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அந்த பகுதியை சேர்ந்த கந்து வட்டிக்காரரின் தொல்லை தாங்க முடியாமல் மந்திராலயாவில் தற்கொலை செய்து கொள்ள வந்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து அந்த பெண் மெரின்டிரைவ் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். மந்திராலயாவில் பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story