மகாபுஷ்கர விழாவையொட்டி தாமிரபரணியில் படித்துறை கட்ட சிறப்பு பூஜை மடாதிபதிகள்–ஜீயர்கள் கலந்து கொண்டனர்
மகாபுஷ்கர விழாவையொட்டி நெல்லை அருகே தாமிரபரணியில் படித்துறை கட்டுவதற்கு நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் மடாதிபதிகள், ஜீயர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை,
மகாபுஷ்கர விழாவையொட்டி நெல்லை அருகே தாமிரபரணியில் படித்துறை கட்டுவதற்கு நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் மடாதிபதிகள், ஜீயர்கள் கலந்து கொண்டனர்.
படித்துறைநெல்லை தாமிரபரணி ஆற்றுக்கு 144 ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் மகா புஷ்கர விழா வருகிற அக்டோபர் மாதம் 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசும், துறவிகள் கூட்டமைப்பும் இணைந்து செய்து வருகின்றன. இதையொட்டி தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள படித்துறைகள் சீரமைக்கப்படுகின்றன.
இந்த நிலையில் துறவிகள் கூட்டமைப்பு மற்றும் அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் சார்பில் நெல்லை அருகே உள்ள அருகன்குளத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள ஜடாயு துறையில் படித்துறை கட்டுவதற்கு நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது.
மடாதிபதிகள்–ஜீயர்கள்இதில் நாங்குநேரி வானமாமலை ஜீயர், ஆழ்வார்திருநகரி எம்பெருமான் ஜீயர், கொங்கு மண்டல நாராயண ஜீயர், திருச்சி ஸ்ரீரங்கம் பவுன்புகரபுரம் ஜீயர், பெருங்குளம் செங்கோல் ஆதீனம், துறவிகள் சங்க தலைவர் ராமானந்தா, நெல்லை பக்தானந்தா சுவாமி, எட்டெழுத்து பெருமாள் கோவில் வரதராஜன் சுவாமி மற்றும் பலர் கலந்து கொண்டு பூஜை செய்தனர்.
பின்னர் அங்கு தண்ணீர் தெளித்து பல்வேறு அடிப்படை பணிகளுக்கான தொடக்க நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.