வியாபாரி மர்ம சாவு: உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியல்
மர்மமான முறையில் இறந்த வியாபாரியின் உடலை வாங்க மறுத்து பெரம்பலூர் அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிகாடு கிழக்கு, தெற்கு தெருவை சேர்ந்தவர் சபியுல்லா பாபு (வயது 48). இவருக்கு திருமணமாகி மெகராஜ் பானு என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். சபியுல்லா பாபு லெப்பைக்குடிகாடு பஸ் நிலையத்தில் தள்ளுவண்டியில் கம்மங்கூழ் வியாபாரம் செய்து வந்தார்.
இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு லெப்பைக்குடிகாடு- பெண்ணக்கோணம் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே உடலில் படுகாயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற மங்களமேடு போலீசார் சபியுல்லா பாபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சபியுல்லா பாபுவை யாரேனும் கொலை செய்தனரா? என்பது உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் நேற்று மாலை சபியுல்லா பாபுவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவருடைய உறவினர்கள், உடலை வாங்க மறுத்து மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், லெப்பைக்குடிகாடு-பெண்ணக்கோணம் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் அருகே ஒரு இடத்தில் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். அங்கு மது குடிப்பவர்கள் தகராறில் ஈடுபடுவது வழக்கம். இந்நிலையில் சபியுல்லா பாபு அங்கு சென்றபோது மது குடிப்பவர்கள் தகராறில் ஈடுபட்டதில், அவரை அடித்து கொலை செய்திருக்கலாம். அவர்களை கைது செய்ய வேண்டும். மேலும் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் நபரை கைது செய்து, அங்கு மது பாட்டில்களை விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும், என்றனர். மேலும் சபியுல்லா பாபுவின் குடும்பத்திற்கு அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் கூறினர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த பெரம்பலூர், மங்களமேடு போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்களுடைய கோரிக்கை தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர். இதையடுத்து மறியலை கைவிட்டு சபியுல்லா பாபுவின் உடலை உறவினர்கள் வாங்கி சென்றனர். இந்த சம்பவத்தால் நேற்று அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story